Sunday, November 28, 2010

சுபயோக சுபதினத்தில் .... ...முதல் சமையல் குறிப்பு .

தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் அனைத்து அன்பர்களுக்கும் வணக்கம்.  ஒரு சுபயோக சுபதினத்தில் , நானும் ப்ளாக் எழுத வந்து விட்டேன். தளிகை என்றால் வைணவ பாஷையில் சமையல் என்று அர்த்தம்.  இன்று பல வைணவர் வீட்டிலேயே இந்த சொல்லை பயன்படுத்துவது இல்லை. இது போல ஒவ்வொரு community லேயும் உள்ள பல சுவாரஸ்யமான விஷயங்கள்,  பேச்சு வழக்குகள் உண்டு.  பலவற்றை இழந்துவிட்டோம்.
Anyway நான் இந்த ப்ளாக் எழுத வந்த கதை என்னவென்றால்.......... ஒண்ணுமே இல்லை. எல்லாரும் பண்றாங்களே நாமும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதையும் செய்துடுவோம்னு  நினைச்சேன்.
மஞ்சி வாண்டு யோசனை என்னன்னா தினப்படி வீட்ல பண்ற சமையல் தான் . தினம் ஒரு receipe போஸ்ட் பண்ண போறேன். எல்லாமே நான் ட்ரை பண்ணியது தான்.
சில டிவி ஷோல பார்த்தது சில நெட்ல புடிச்சது , பெரும்பாலும் எங்கம்மா பண்ணினது மாமியார் செய்தது இப்படி எல்லாம் கலந்து கட்டி வரும்.

முதல் சமையல் குறிப்பு :

ரொம்ப சிம்பிளா - வெந்நீர் போடுவது எப்படி :  ஒரு பாத்திரத்தில் வேண்டிய தண்ணீர் எடுத்து , அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை  வைத்து மூடி விடவும். கொதி வந்ததும் இறக்கவும்.  மூடி வைப்பதால் சீக்கிரம் கொதி வரும்.

ஹி.. ஹி... நாளை சந்திப்போம்

No comments:

Post a Comment