Monday, November 29, 2010

கத்திரிக்காய் அடை குழம்பு - BRINJAL ADAI KUZHAMBU

கத்திரிக்காய் அடை குழம்பு : 

தேவையான பொருட்கள் : 
கத்தரிக்காய்             -    10  (சிறிய குட்டி சைஸ்)
புளி                             -  சிறிய எலுமிச்சை அளவு
கடலைப் பருப்பு      -  ஒரு கை அளவு
துவரம் பருப்பு         - ஒரு கை அளவு
வர மிளகாய்           - 6 அ 7
வெள்ளை எள்         - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம், கருவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு, உப்பு, எண்ணெய்  - சிறிது

கத்திரிக்காய் சின்ன சின்னதாக பாத்து வாங்கவும். நன்றாக கழுவி பாவாடை நீக்கவும்.  கத்தியால் மேல் பக்கம் ஒரு வெட்டு  போடவும். கீழ் பக்கத்தில் எதிர் திசையில் ஒரு வெட்டு போடவும். இது காயின் பாதி வரைதான் வரவேண்டும் . FULLA  வெட்டி விட கூடாது. முழு கத்தரிகாயகத்தான் போடவேண்டும்.

   
அடைக்க பொடி :  கடலை பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, எள், வரமிளகாய் எல்லாம் தனி தனியாக ஒரு சொட்டு எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும். சிறிது ஆறியதும் மிக்சியில் போட்டு  கரகரப்பாக இடிக்கவும்.
இந்த பொடியை எல்லா கத்திரிக்காயிலும்  அடைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து, இந்த பொடி அடைத்த கத்திரிகளை ஒவ்வொன்றாக போட்டு நிதானமாக பிரட்டவும். அதிகமாக பிரட்டினால், பொடி வெளி வந்து விடும். கத்திரி நிறம் மாறி சிறிது வெந்தவுடன் , புளியை கரைத்து கொட்டவும். எவ்வளவு குழம்பு வேண்டுமோ அவ்வளவு நீர் விடலாம். ஆனால் புளி அளவு பார்த்து கொள்ளவும். உப்பு போடவும். நன்றாக கொதித்து கத்திரி புளி இரண்டும் வெந்ததும் , மீதமுள்ள பொடியை தூவவும்.  பொடி தூவ தூவக்  குழம்பு கெட்டி ஆகி விடும். ரொம்ப கெட்டி ஆனால் நீர் விட்டு கொள்ளலாம்.  உப்பு சரி பார்த்து, சிறிது கொதித்ததும் இறக்கவும்.

பி. கு. : நல்லெண்ணெய் சிறந்தது.  காரம் போதவில்லையனால் கொதிக்கும்போது சிறிது மிளகாய் பொடி தூவி   விடலாம்.

  

BRINJAL ADAI KUZHAMBU:

INGREDIENTS :

BRINJAL                   : 10 (SMALL SIZE)
TAMARIND              : SMALL LEMON SIZE ( DISSOLVE IN 3 CUPS OF WATER)
KADALAI PARUPU :  A HAND FULL
THUVARAM PARUPU : A HAND FULL
DRIED CHILLI           : 6 -7
SESAME (WHITE)    : 1 TBSP
ASAFOTIDA, CURRYLEAVES, MUSTARD SEEDS, BENGALGRAM, SALT, OIL - AS REQUIRED

BRIINJAL SHOULD BE SMALL BABY SIZED. REMOVE THE "PAVADAI" STEM PORTION. MAKE A SLIT ON TOP AND A SLIT IN OPPOSITE DIRECTION IN THE BOTTOM. DONT CUT THE BRINJAL.

PODI :
ROAST KADALAI PARUPU, THUVARAMPARUPU, DRIED CHILLI, SESAME SEEDS, ASAFOETIDA( ONE PINCH) , CURRYLEAVES (1 TWIG)  , EACH SEPARATELY WITH ONE DROP OF OIL.  MAKE THIS INTO A COARSE POWDER.

NOW, FILL THE SLIT IN THE BRINJAL WITH THE POWDER AND SET ASIDE.

POUR 4 TBSP OF OIL IN A PAN AND HEAT. ADD MUSTARD SEEDS LET IT CRACK THEN ADD  BENGAL GRAM, ASAFOETIDA, CURRY LEAVES (1 TWIG) THEN ADD THE PREPARED BRINJALS ONE BY ONE, TOSS IT VERY SLIGHTLY COATING THE HOT OIL. BE CAREFUL THAT THE POWDER DOES NOT COME OUT OF THE BRINJAL TOTALLY.  ONCE THE BRINJAL CHANGES COLOR AND BECOMES SOFTER, ADD THE TAMARIND WATER. BRING TO BOIL ADD SALT TO TASTE. IN 3-4 MINTUES   THE BRINJALWILL BE COOKED AND THE RAW SMELL OF TAMARIND WILL BE GONE, ADD THE BALANCE POWDER. THE KUZHAMBU WILL GET THICKENED . IF IT BECOMES TOO THICK ADD LITTLE MORE WATER. AFTER 3 MINUTES OF BOILING REMOVE FROM FLAME.

BRINJAL ADAI KUZHAMBU IS READY.





-

4 comments:

  1. ஆஹா.. ஆஹா.. படிக்கும் போதே ..... ஊறுதே மேடம். சமையலுக்கு இன்னுமொரு பெயர் தளிகை என்று இருப்பது இப்போது தான் இந்த பெயரை கேள்விப்படுகிறேன். வீட்ல சொல்லி செய்து சாப்பிட்டு பார்க்கனும். கிளப்புங்க இனி உங்கள் ராஜ்ஜியம் தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. super...keep them coming. but remember to post the english version too. illena oru recipe padikka enakku 1 month aayidum! :D plus additional danger of reading incorrectly. he he..appuram kuzhambu will become smething else!

    ReplyDelete
  3. thanks covai ravee sir, you are the first visitor. adhil enaku miga sandhosham. ungal ookathirku nanri

    ReplyDelete
  4. thanks dhanya for visiting. I already planned to post in english too, keeping u in mind. keep visiting.

    ReplyDelete