Tuesday, November 30, 2010

தக்காளி தொக்கு : அம்மா ஸ்டைல்- TOMATO THOKKU

தக்காளி  தொக்கு : அம்மா ஸ்டைல்

தேவையான பொருட்கள் :

 தக்காளி                       :  10  ( ஆப்பிள் தக்காளி நன்றாக பழுத்தது)
 நல்லெண்ணெய்      :  அரை  கப்
வெந்தயம்                   :  1 டீஸ்பூன்
வெல்லம்                    :  சிறிய துண்டு
மிளகாய் பொடி        : 3 - 4 tbsp  (ருசிக்கேற்ப  சேர்க்கவும்)
உப்பு, , கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, மஞ்சள் பொடி- சிறிதளவு


செய்முறை  :

தக்காளியை நன்றாக கழுவி துடைத்து மிக்சியில் நல்ல விழுதாக அரைத்து எடுக்கவும்.

 வாணலியில் வெந்தயம் போட்டு எண்ணெய் விடாமல் வெறுமே சிவக்க வறுக்கவும் (கருப்பாக  விட கூடாது. கசந்து விடும்) இதை பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் , பெருங்காயம் , கருவேப்பிலை சேர்க்கவும். அரைத்த தக்காளியை கொட்டவும். (கவனமாக கொட்டவும், மேலே தெளிக்கும் ) மஞ்சள் பொடி  போடவும். நன்றாக கொதிக்க விடவும்.  நன்றாக கொதி வந்து தக்காளியின் பச்சை வாசனை போனதும்,  ருசிக்கேற்ப உப்பு, சிறிய துண்டு வெல்லம், மிளகாய் பொடி  போடவும். அடுப்பை சிம் இல் வைத்து  இந்த கலவையை  நன்றாக கொதிக்க விடவும். கொதித்து கொதித்து நீர் வற்றி எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அவ்வப்போது கிளறி கிளறி விடவும். இது எண்ணையிலேயே வதங்க  வேண்டும். வேண்டுமானால் மேலும் 2  tbsp எண்ணெய் விட்டு கொள்ளலாம். உப்பு காரம் சரி பார்த்து கொள்ளவும்.

இறக்கும் பதம் :  வாணலியில் ஒட்டாமல் வரும். தொக்கு எண்ணையில் முடிச்சு முடிச்சாக தெரியும் அப்போது இறக்கலாம். இறக்கும் முன் வெந்தய பொடி தூவவும். தூவி இரண்டு கொதி  விட்டு இறக்கவும்.
நல்லெண்ணெய் இல்லாவிட்டால் மற்ற எண்ணெய் உபயோகிக்கலாம்,




 இந்த தக்காளி தொக்கு மிக சுவையானது. இட்லி தோசை சப்பாதிக்கு  தொட்டுகையகவும், சாதத்தில் கலந்தும்  சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு நல்ல ஜோடி .  எண்ணெய் மிதக்க இருப்பதால் 4 -5 நாட்கள் தாங்கும்.

TOMATO THOKKU - MOTHER'S STYLE

INGREDIENTS REQUIRED:

TOMATO                                             : 10 (APPLE TOMATO, RIPE)
GINGELLY OIL                                   : HALF CUP
FENUGREEK (VENDHAYAM)            : 1 TSP
JAGGERY       (VELLAM)                   :  SMALL PIECE
CHILLI POWDER                                : 3-4 tbsp  (Add to taste)
SALT, MUSTARD, ASAFOETIDA, CURRYLEAVES, TURMERIC -  SMALL QUANTITY

PROCEDURE:

. 
WASH AND CLEAN TOMATOES AND GRIND IN MIXIE INTO A FINE PASTE

DRY ROAST THE FENUGREEK (VENDHAYAM) . CAREFUL NOT TO BLACKEN. THEN POWDER THE SEEDS. KEEP ASIDE.

ADD THE OIL TO THE PAN AND HEAT.  ADD THE MUSTARD, AFTER IT SPLUTTERS, ADD THE CURRY LEAVES AND ASAFOETIDA .  NOW ADD THE TOMATO PASTE CAREFULLY. (IT MAY SPLASH. SO BE CAREFUL) ADD 1TSP TURMERIC.  LET THIS TO BOIL TILL THE RAW SMELL OF TOMATO IS OFF AND IT IS COOKED.

NOW ADD SALT TO TASTE, JAGGERY, CHILLI POWDER. KEEP THE STOVE IN SIM AND LET THIS COOK. THE WATER WILL SLOWLY EVAPORATE AND OIL SEEP OUT. CHECK IT FOR CORRECT TASTE. IF U WANT CAN ADD 1 TBSP OF OIL AGAIN IF NECESSARY.  KEEP STIRRING OFTEN.

ADD THE FENUGREEK POWDER AND LET IT COOK FOR ANOTHER 2 MTS.

IT IS READY, WHEN THE PASTE ROTATES, DOES NOT STICK ON THE PAN.  REMOVE FROM FLAME. READY TO SERVE.

THIS THOKKU IS VERY TASTY AND AS IT IS COVERED WITH OIL IT CAN BE GOOD FOR 4-5 DAYS.  IT GOES WELL WITH IDLI, DOSAI, CHAPPATHI.  CAN BE MIXED WITH RICE TO MAKE TOMATO RICE.  GOOD COMBINATION FOR CURD RICE.

IF U DONT LIKE GINGELLY OIL, CAN USE ANY OTHER OIL.

ENJOY!!.

2 comments:

  1. தேவகி மேடம்... அட்டகாசமான ரெசிபி நீங்க எழுதின மாதிடி சப்பாத்திக்கும் நல்ல ஜோடி தான். ஒரு மனுசனுக்கு நாக்கு சுவையும் இசை சுவையும் தான் முக்கியம். முதல்ல நீங்க தாங்க அடுத்தத நீங்க வான்வெளியில் தருவதை நாங்க தருகிறோம். கரெக்ட்தானே?... அதுமட்டுமல்லாமல் செய்து பார்த்து உடனுக்குடன் போட்டோ எடுத்தும் சேர்த்து கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி கோவை ரவி சார், மேலும் நிறைய வரும். காத்திருக்கவும்.

    ReplyDelete