Wednesday, December 1, 2010

பீர்கங்காய் துகையல் - RIDGEGUARD (PEERKANGAI) THUGAIYAL

பீர்கங்காய்  துகையல்  


தேவையான பொருட்கள் :
  •  பீர்கங்காய் தோலி -  கால் கப்
  • உளுத்தம் பருப்பு   கால் கப்
  • வர மிளகாய் 4
  • புளி ஒரு கோலி அளவு
  • பெருங்காயம் 1 சிட்டிகை
  • உப்பு - ருசிக்கேற்ப
  • வெள்ளை எள் 1  மே. க.
  • தேங்காய் துருவல் 4 மே. க.
  • எண்ணெய் - வதக்க

செய்முறை  :


 பீர்கங்காயை   அதன் தோல் நீக்கி , அந்தத்  தோலை நன்றாக கழுவி பொடி பொடியாக நறுக்கவும். நடுவில் நார் வரும். அதை நீக்கி விடவும். மிக பொடியாக நறுக்கினால்தான் சுலபமாக வதக்க முடியும். முதலில் ஒரு துண்டு  நறுக்கி  சாப்பிட்டு பார்க்கவும். சில சமயம் கசக்கும் . கசந்தால் உபயோகபடாது.

வாணலியில் சிறிது  எண்ணெய் விட்டு பீர்கங்காய்  தோலி துண்டுகளை நன்றாக வதக்கவும். லேசாக சுருண்டு  பிரவுன் நிறத்தில் வரும் போது எடுத்து விடவும்.  அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், புளி, தேங்காய் துருவல் எல்லாம் ஒவ்வொன்றாக வறுக்கவும். எள்ளை வெடிக்க விடவும். 

நன்றாக ஆறவிடவும். பிறகு அனைத்து பொருள்களையும் ஒன்றாக மிக்சியில் விழுமூனாக அரைக்கவும்.
பீர்கங்கை தொகையல் தயார்.  தொட்டுகையாகவும் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.


RIDGEGUARD (PEERKANGAI) THOGAIYAL 

INGREDIENTS REQUIRED:

  • RIDGE GUARD SKIN - QUARTER CUP
  • ULUTHAM PARUPPU - QUARTER CUP
  • DRIED RED CHILLI  - 4
  • TAMARIND - MARBLE SIZE
  • ASAFOETIDA - 1 PINCH
  • SALT TO TASTE
  • WHITE SESAME SEEDS - 1 TBSP
  • COCONUT GRATINGS - 4 TBSP
  • OIL TO SAUTE
PROCEDURE:

CUT A SMALL PIECE OF THE INNER FLESH AND TASTE IT. SOMETIMES IT MIGHT BE BITTER. IF IT IS BITTER DONT USE IT.

PEEL THE RIDGEGUARD - PEERKANGAI- AND COLLECT THE SKIN. WASH IT WELL AND CUT IT INTO VERY SMALL PIECES. A THICK STRING - NAAR- MAY BE PRESENT. REMOVE THAT.  CUTTING TO VERY SMALL PIECES MAKES IT EASY TO SAUTE.

ADD LITTLE OIL TO PAN AND SAUTE THE SKIN PIECES WELL, TILL LIGHT BROWN AND SHRUNKEN. REMOVE.  NOW FRY ALL THE OTHER INGREDIENTS ONE BY ONE. FRY WELL TILL BROWN. SPLUTTER THE SESAME SEEDS.

LET ALL THE INGREDIENTS COOL DOWN AND GRIND INTO A FINE PASTE.

PEERKANGAI THOGAIYAL IS READY. IT IS A GOOD SIDE DISH FOR IDLI, DOSAI AND ALSO CAN BE MIXED IN COOKED RICE -SADHAM.

ENJOY!!!.

No comments:

Post a Comment