Thursday, April 21, 2011

நன்னாரி சர்பத்- NANAARI (SARASPARILLA) SHARBAT CONCENTRATE

வெயில் காலத்துக்கு  மிக அவசியமானது.   நோய் வராமல் காக்கும்.  குளிர்ச்சியை கொடுக்கும்.  இதன் வாசனை மாகாளி கிழங்கை போல இருக்கும்.

    
 ஒரு பிடி வேருக்கு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.  டிகாக்ஷன்  நன்றாக இறங்கியவுடன் ஆறவிடவும்.  வடிகட்டி கொள்ளவும்.

நாட்டுமருந்து கடைகளில்  நன்னாரி வேர்  பொடி கிடைக்கிறது. இதே முறையில் உபயோகிக்கலாம்.

இரண்டு கப் சர்க்கரையில் ஒரு  கப் நீர் ஊற்றி கொதிக்க விடவும்.  ஒரு மூடி எலுமிச்சை பிழியவும். ஒரு ஏலக்காய் போடவும்.  பிசுக்கு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.  குப்பை இருந்தால் வடிகட்டி கொள்ளவும்.

இரண்டும் நன்றாக ஆறியவுடன், ஒன்றாக கலந்து, இரண்டு மூடி பன்னீர் விட்டு கலந்து பாட்டிலில் கொட்டி பிரிட்ஜில் வைக்கவும்.

இது CONCENTRATE .   இதில் ஒரு கால் டம்ளர் எடுத்து அரை தே.க. எலுமிச்சை ரசம் விட்டு முக்கால் டம்ளர்  குளிர்ந்த நீர் ஊற்றி கலந்து சாப்பிடலாம்.

நன்னாரி சர்பத் தயார்.












NANAARI - SARASPARILLA - SHARBAT CONCENTRATE

This is a total treat for summer. This helps cooldown body temperature and protects from ailments due to heat.  The flavour is just like "Makali kizhangu".

Take one handful of the Nanari root add one litre of water and boil. When the dicoction is well formed remove from flame.  filter it and cooldown to room temperature.  In some shops "Naatu marundhu kadai" the ready made powder of Nanaari roots are sold.  U can use it in the same method.

Take 2 cups of sugar add one cup of water and boil.  Squeeze one half lemon and one elachi pod.  When syrup becomes sticky , remove, filter and cooldown.

Mix both the liquids add two tbsp of rose water . mix well and store in glass/ plastic bottles in the fridge.

To quarter part of the sharbat concentrate add 3 quarter of water and one tbsp of lemon juice and mix and serve cold

Nannari sharbat ready.


Monday, April 11, 2011

மாங்காய் தொக்கு பாரம்பரிய முறை - MANGO THOKKU (TRADITONAL METHOD)

 மாங்காய் தொக்கு என் பாட்டி செய்தமுறைப்படி இங்கே கொடுத்துள்ளேன்.

நல்ல புளிப்பு மாங்காய் பெரிய காயாக வாங்கவும்.  மாங்காய் எப்போதுமே பெரிதாகவும் தேங்காய் சிறியதாகவும் வாங்க வேண்டும் என்று அம்மா சொல்லுவார். 

மாங்காயை கழுவு துடைத்து துருவிக் கொள்ளவும்.
வெந்தயம் இரண்டு தேக்கரண்டி வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.

இரண்டு கப் துருவல் இருந்தால்,  வாணலியில் கால் கப் நல்லெண்ணெய் விட்டு சூடு பண்ணவும்.  இரண்டு தேக்கரண்டி கடுகு வெடிக்க விட்டு ஒரு தேக்கரண்டி பெருங்காயம் போட்டு மாங்காய் துருவலைக் கொட்டி கிளறி விடவும்.  ஒரு மேஜைக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சபொடி, மூன்று மேஜைக்கரண்டி மிளகாய்ப்பொடி போட்டு கிளறி வதக்கவும்.  ஒரு சிறிய துண்டு வெல்லம் போடவும்.  

அடுப்பை சிம் இல் வைத்து நன்றாக கிளறி விட்டு,  எண்ணெய் மிதக்கும் போது வெந்தயபொடி தூவி கிளறி  இறக்கவும்.

உப்பு காரம் உங்கள் ருசிகேற்ப்ப சேர்த்துக் கொள்ளவும். 

MANGO THOKKU TRADITIONAL WAY

This is the receipe of my grandmother.

Buy good quality big mangoes that are sour -pulippu.  Clean them and grate.
Dry roast 2 tsp of fenugreek (vendhayam) and powder.

For 2 cups of  mango gratings,  in a deep pan add quarter cup gingelly oil ( gives good taste and preserves. any other cooking oil will do) and heat.  Splutter 2 tsp of mustard seeds, one tsp of Asafoetida, add the mango grating and mix well.  Add one tbsp salt, half tsp turmeric powder , 3 tbsp of redchilli powder , a small bit of jaggery.

Mix and stir well and saute. Keep the stove in simmer and cook well.  When oil seeps out, add the fenugreek powder mix well and remove from flame.

Add salt and chilli powder according to taste.

This will be good for atleast 10 days , use a dry plastic spoon, store in glass or plastic containers.

  


பனீர் சிப்ஸ்

பனீர் சிப்ஸ் சும்மா கொறிக்க

பனீர் சின்ன சின்ன மெல்லிய சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.  ஒரு தட்டில் பரப்பி மேலே உப்பு,  மிளகாய்ப்பொடி,  மிளகு பொடி,  ஒரு சிட்டிகை  சீரகத்  தூள்,   ஒரு சிட்டிகை தனியாத் தூள் தூவி நன்றாக கலக்கவும்.

தோசைக் கல்லை சூடாக்கி பரவலாக எண்ணெய் விட்டு  மேலே பனீர் துண்டங்களை பரப்பி இரண்டு புறமும் நன்றாக  சிவக்க வறுத்து மொறுமொறுப்பாக விட்டு எடுக்கவும்.  

சில சமயம்  பனீர் கெட்டியாகி விடும், இருந்தாலும் சுவையாக இருக்கும்.

பனீர் சிப்ஸ் தயார்




PANEER CHIPS - FOR PAST TIME SNACK

Cut paneer into thin small squares,  spread in a plate and sprinkle salt, redchillie powder, pepper powder, one pinch cumin powder, one pinch coriander powder and mix well

Heat Dosaikal - or flat pan and apply oil .  Spread and arrange squares on the pan.  Fry the paneer pieces till they are red and roasted well.

Sometimes paneer can become hard, still it tastes good.

Paneer chips ready!!

Wednesday, April 6, 2011

ஆரஞ்சு தோல் கொத்சு - ORANGE THOL KOTSU

ஆரஞ்சு தோல் வெள்ளை படலம் நீக்கி பொடியாக நறுக்கி ஒரு கப் அளவு எடுத்துக்  கொள்ளவும்.

ஒரு எலுமிச்சை அளவு புளியை கரைத்து கொள்ளவும்.

பொடிக்க : 

உளுத்தம்பருப்பு - 2  TBSP 
மல்லி விரை -   2  TBSP 
மிளகு  - 1  TSP 
சீரகம் - 1  TSP 
வரமிளகாய் - 1
வெள்ளை எள்ளு -  1  TBSP 
எல்லாம் தனி தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும்.  எள்ளை தனியாக பொடிக்கவும். மற்றவற்றை சேர்த்து பொடிக்கவும்.

வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, மஞ்சபொடி, பெருங்காயம்  தாளித்து ஆரஞ்சு தோல் போட்டு நன்றாக வதக்கவும்.  உப்பு போடவும். நன்றாக சுருள வதக்கவும்.  புளி தண்ணீர் கொட்டி கொதிக்கவிடவும். ஒரு துண்டு வெல்லம் போடவும். பச்சை வாசனை போனவுடன்  பொடியை தூவி கொதிக்கவிடவும்.  கடைசியா எள்ளுபொடியை  தூவவும். எண்ணெய் மிதக்கும் போது , இறக்கவும்.  தொக்கு பதத்தில் வரும்.

கொத்சு தயார்.  தொட்டுகையாகவும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

(RECEIPE GIVEN BY MY SISTER PADMA)


ORANGE PEEL KOTSU

Take one cup of Orange peel and cut into small pieces.
Dissolve one lemon size tamarind in water.

TO MAKE POWDER:
SPLIT BLACK GRAM- 2 TBSP
CORIANDER SEEDS - 2 TBSP
PEPPER - 1 TSP
SEERAGAM - 1 TSP
DRIED RED CHILLI - 1
CURRY LEAVES - 1 TWIG
WHITE SESAME - 1 TSP

Dry roast all items separately. Grind all ingredients together except sesame, which grind separately
In a skillet or vaanali add quarter cup of oil and heat. Add mustard seeds, turmeric powder, Asafoetida and the orange peels and saute.  Add salt and saute till it is cooked well.   Add the tamarind water and bring to boil. Add small piece of jaggery.  When the raw smell is gone, add the powder mixture (not the sesame) . boil well. it will thicken. now add the sesame powder and cook again.  when it becomes thick and oil oozes out,  remove from flame.

Orange Peel Kotsu is ready.  Good as a side dish and mix with rice.

Monday, April 4, 2011

சேனைகிழங்கு வறுவல் - SENAIKIZHANGU VARUVAL - YAM FRY

நல்ல அரிக்காத  சேனைகிழங்கு வாங்கி நன்றாக கழுவி தோல் சீவி பெரிய துண்டங்களாக நறுக்கவும்.  சிறிய எலுமிச்சை அளவு புளியை கரைக்கவும்.
 
2  கப் சேனை துண்டங்களுக்கான அளவு:  ஒரு அகல பாத்திரத்தில்  போட்டு மேலே உப்பு ருசிக்கு,  மிளகாய் பொடி ஒரு கரண்டி, மல்லி தூள் அரை கரண்டி,   புளி கரைசல் ஒரு கரண்டி,  அரிசி மாவு கால் கரண்டி, பொட்டுகடலை மாவு கால் கரண்டி போட்டு நன்றாக பிரட்டவும்.   இதை அரை மணி நன்றாக ஊறவிடவும்.
 
ஒரு வாணலியில் 2  கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை பொரித்து மேலே ஊறிய சேனைகிழங்கை கொட்டவும்.நன்றாக கிளறி விட்டு வதக்கவும்.  நல்ல மொறுமொறுப்பாக வறுக்கவும். 
 
சேனை கிழங்கு வறுவல் தயார். 
 
SENAIKIZHANGU VARUVAL - YAM FRY
 
BUY GOOD QUALITY YAM , CLEAN WELL AND CUT INTO LARGE PIECES.  DISSOLVE A SMALL LEMON SIZED TAMARIND IN WATER.
 
FOR 2 CUPS OF YAM PIECES : TAKE THEYAM IN A VESSEL ADD SALT, REDCHILLI POWDER 3TBSP,   DHANIYA POWDER 1.5TBSP, TAMARIND JUICE ,  RICEFLOUR 1 TBSP, ROASTED GRAM (POTTUKADALAI) FLOUR 1  TBSP.
 
ADD ALL AND MIX WITH YAM PIECES WELL SO THAT IT IS COATED WELL.   LEAVE THIS TO MARINATE FOR HALF AN HOUR.
 
TAKE A DEEP PAN, ADD 5 TBSP OF OIL AND HEAT.  SPLUTTER MUSTARD SEEDS, ADD ASAFOETIDA, CURRY LEAVES AND THEN THE YAM MIXTURE.   SAUTE THIS WELL , KEEP STIRRING.  AND LET THE YAM COOK AND ROASTED WELL.
 
YAM FRY READY TO EAT !!
 
 
 

Sunday, April 3, 2011

அப்பளம் வத்தல் குழம்பு - APPALAM VATHAL KUZHAMBU

பாரம்பரியமான சுவையான குழம்பு, வயற்றில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யும்.

ஒரு சிறிய எலுமிச்சை அளவு  புளியை 4  கப் நீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

இரண்டு உளுந்து அப்பளம் எடுத்து எட்டாக கிழித்து கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஒரு கரண்டி விட்டு சூடானபின் கடுகு பெருங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய்,  சுண்டைகாய் வத்தல் கால் கப், அல்லது மணத்தக்காளி வத்தல் கால் கப்,  அப்பளம் எல்லாம்  ஒவ்வொன்றாக  போட்டு நன்றாக வறுக்கவும். வத்தல் நன்றாக பொரிந்து, அப்பளமும் நன்றாக பொரிய வேண்டும். 

புளித் தண்ணீரைக் கொட்டவும். மஞ்சள் பொடி போடவும்.  நன்றாக கொதிக்க விடவும். புளி பச்சை வாசனை போனதும் உப்பு போடவும். சிறிது கொதிக்க விடவும்.  

குழம்பு நீராக இருந்தாலும், சிறிது நேரத்தில் அப்பளம்  கரைந்து குழம்பை  கெட்டி ஆகி விடும்.

அப்பளம் போட்ட வத்தல் குழம்பு தயார். 

இதே முறையில் அப்பளம் மட்டுமோ அல்லது வத்தல் மட்டுமோ போட்டு செய்யலாம்.



 APPALAM VATHAL KUZHAMBU

This is a traditional tasty dish which helps in clearing stomach problems.

Dissolve one small lemon sized tamarind in 4 cups of water.
Take two Ulunthu Appalams and tear into 8 pieces.

In a deep pan add quarter cup of Gingelly oil and heat. Splutter one spoon mustard seeds, then add quarter teaspoon asafoetida, one twig of curry leaves, one tsp Fenugreek (vendhayam), two dried chillies, Sundaikaai vathal or Manathakkaali vathal quarter cup,  appalam pieces, one by one. fry each item well. the vathal and appalam must be fried well.

then add the tamarind juice. Add turmeric powder.  bring this to boil and cook till the raw smell of tamarind is gone.  add salt to taste.  and boil.

The kuzhambu may be watery.  but as the appalam gets dissolved it will become thick. 
Appalam Vathal kuzhambu is ready.

The kuzhambu can be done with appalam or the vathal alone.

Saturday, April 2, 2011

அம்மணிக் கொழுக்கட்டை - AMMINI KOZHUKATTAI - TINY RICE BALLS

அம்மிணிக் கொழுக்கட்டை செய்ய கொஞ்சம் பொறுமை வேண்டும். இரண்டு முறைப்படி தயாரிக்கலாம்.

முதல் முறைப்படி :

பச்சரிசி இரண்டு கப் எடுத்து கழுவி தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு நீரை வடிகட்டி அப்படியே பிசிறி வைக்கவும். ஒரு அரை மணி.    பிறகு எடுத்து ஒரு வெள்ளை துண்டில் பரப்பி ஆற விடவும். பத்து நிமிடம் கழித்து மிக்சியில் நன்றாக பொடிக்கவும். நல்ல nice மாவாக இருக்க வேண்டும்.

வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் நீர் 4  கப் விட்டு உப்பு போட்டு  கொதிக்க விடவும். கொதி வந்ததும் பொடித்த மாவை  தூவி கட்டி இல்லாமல் கிளறவும். மாவு நன்றாக சுருண்டு  ஒட்டாமல்  வரும் போது இறக்கவும்.  


இரண்டாவது முறைப்படி:

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவிட்டு நீர் விட்டு நல்ல விழுமூணாக நன்றாக அரைத்து தோசை மாவை விட நீராக கரைத்து கொள்ளவும். உப்பு போட்டு கொள்ளவும்.  வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், கரைத்த மாவை ஊற்றி கை விடாமல் கிளறவும்.   வெகு சீக்கிரம் மாவு கெட்டி பட்டு விடும். கட்டி தட்டாமல் நன்றாக கிளறவும். மாவு ஒட்டாமல் வரும் போது இறக்கி விடவும்.  

இப்படி தயார் செய்த மாவை மிக சிறிய உருண்டைகளாக உருட்டவும்.  குக்கரில் ஆவியில் இட்லி போல வேக விட்டு எடுக்கவும்.

வாணலியில் 2 கரண்டி எண்ணெய் விட்டு  கடுகு, உளுத்தம்ப்பருப்பு,  கடலைப்பருப்பு,  கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து  மஞ்சள்பொடி,  பச்சைமிளகாய்,  
தேங்காய் துருவல்  போட்டு கிளறி  கொழுகட்டைகளை கொட்டி கிளறவும்.    வேண்டுமானால் சிறிது உப்பு போட்டு கொள்ளவும்.  மேலே பருப்பு பொடி அல்லது இட்லி மிளகாய்ப்  பொடி தூவலாம்.

அம்மிணி கொழுக்கட்டை தயார்.

AMMINI KOZHUKATTAI - MINI RICE BALLS

THIS IS QUITE LONG TIRING PROCESS. THERE ARE TWO METHODS.

FIRST METHOD: 

TAKE 2 CUPS OF RAW RICE (PACHARISI) SOAK IN WATER FOR 15 MTS AND STRAIN THE WATER . KEEP THIS IN THE STRAINER FOR HALF AND HOUR. SPREAD THE SOAKED RICE IN A WHITE TOWEL FOR  10 MTS TO TAKE AWAY EXCESS WATER.  

NOW DRY GRIND THE RICE IN TO A VERY FINE FLOUR.

TAKE HALF CUP OIL IN A DEEP PAN AND HEAT.   ADD 4 CUPS OF WATER AND LITTLE SALT AND BRING TO BOIL . ADD THE FLOUR LITTLE BY LITTLE AND KEEP STIRING TO AVOID ANY LUMPS.  STIR WELL TO BREAK THE LUMPS AND MAKE A SMOOTH DOUGH. WHEN THE DOUGH BECOMES NONSTICKY REMOVE FROM FLAME.

SECOND METHOD:

2 CUPS OF RAW RICE SOAK IN 4 CUPS OF WATER FOR ONE HOUR.  WET GRIND THE RICE INTO A VERY FINE BATTER. ADD LITTLE SALT.

TAKE HALF CUP OIL IN A DEEP PAN AND HEAT. ADD THE FINELY GROUND RICE BATTER. KEEP STIRRING WELL COZ, LUMPS WILL BE QUICKLY FORMED.  MAKE THIS IN TO A SMOOTH THICK DOUGH.

TAKE THE SMOOTH RICE DOUGH AND MAKE INTO SMALL TINY BALLS.  KEEP THE BALLS IN STEAM AND COOK LIKE IDLI. 

IN A DEEP PAN ADD 3 TBSP OF OIL ADD MUSTARD, BLACK SPLIT GRAM, BENGAL GRAM, GREEN CHILLIES , CURRY LEAVES, ASAFOETIDA, COCUNUT GRATINGS, LITTLE SALT, TURMERIC POWDER AND FRY. ADD ALL THE BALLS AND MIX WELL.

AMMINI KOZHUKATTAI IS READY.

Thursday, March 31, 2011

நீர் நெல்லிக்காய் - NEER NELLIKAAI (GOOSEBERRY)

நீர் நெல்லிக்காய் சுவை மட்டுமல்ல உடலுக்கு மிக ஆரோக்யம் தரக் கூடியது.

பெரிய நெல்லிக்காய் நல்லதாகப் பார்த்து வாங்கி நன்றாக கழுவி விடவும். ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் எல்லாம் மூழ்கும் அளவு நீர் எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதி வந்ததும்  சுவைக்கேற்ப  உப்பு போட்டு நெல்லிக்காய்களை கொட்டவும். ஒரே நிமிடம் அடுப்பில் வைத்து பிறகு இறக்கி விடவும். ரொம்ப கொதிக்க விட்டால் நெல்லிக்காய்கள் ரொம்ப வெந்து விடும்.

இறக்கிய நெல்லிக்க்காயகளுடன்  பச்சை மிளகாய் 2 அல்லது 3 நீளவாக்கில் வெட்டி போடவும்.   இதை அப்படியே நீரோடு ஊற விடவும். 6 மணி ஊறினால், நன்றாக உப்பு பிடித்து விடும்.

ஊற ஊற ரொம்ப சுவையாக இருக்கும். ஊறிய மிளகாயும் மிக நன்றாக இருக்கும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர, வயற்றில் எந்த பிரச்னையும் குணம் ஆகும். இதை கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைக்கலாம். ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.


NEER NELLIKKAI - GOOSEBERRY IN WATER

THIS IS VERY TASTY AND VERY GOOD FOR HEALTH. 

BUY BIG, FRESH GOOSEBEERY AND CLEAN.  TAKE AS MUCH WATER TO SUBMERGE ALL THE BERRIES IN A BIG VESSEL. BRING TO BOIL. ADD SALT TO TASTE.  ADD ALL THE BERRIES AND LEAVE IN THE STOVE EXACTLY FOR A MINUTE AND REMOVE FROM FLAME. IF BOILED FOR LONG, THE BERRIES WILL BE COOKED TOO MUCH. 

KEEP THE BERRIES IN WATER.  ADD LONG SLIT GREEN CHILLIES.  THE BERRIES WILL ABSORB SALT AND BE READY IN 6 HOURS TIME.  KEEP THIS IN GLASS CONTAINER ALONG WITH THE WATER AND CHILLIES.  THE MORE IT IS SOAKED  , THE TASTIER IT BECOMES.  THE SOAKED CHILLIES ARE ALSO VERY TASTY TO EAT.

DAILY HAVE ONE FULL BERRY WHICH WILL KEEP YOUR STOMACH IN GOOD CONDITION.

தயிர் சேமியா - CURD SEMIYA

தயிர் சேமியா சுவையானதும் சுலபமானதும் ஆகும்.

ஒரு கப் சேமியா வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அதிலேயே நீர் விட்டு கலக்கி கொதிக்க விடவும். உப்பு சுவைக்கேற்ப போடவும்.  தேவையானால் மேலும்  ஒரு அரை கப் நீர் ஊற்றலாம். சில நிமிடங்களிலே வெந்து விடும். அடுப்பில் இருந்து    இறக்கி ஒரு கப் பச்சை தண்ணீரை ஊற்றவும். ஒரு கலக்கு கலக்கி இதை ஒரு வடிகட்டியில் போட்டு நன்றாக வடிகட்டவும்.  சேமியவின் கொழகொழப்பை நீக்கி விடும்.   இதை பரிமாறும் பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.   

வாணலியில் அல்லது தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம்,  எல்லாம் வறுத்து சேமியாவில் கொட்டவும். காரட் துருவி  போடவும்.  கொத்தமல்லி நறுக்கி தூவவும். வெள்ளரி, மாங்காய் தோல் சீவி  மிக சிறிய துண்டங்களாக நறுக்கி போடலாம்.  

தயிர் ஒரு கப் எடுத்து நன்றாக கடைந்து சேமியாவில் ஊற்றவும். அரை கப் பால் ஊற்றவும்.  கலக்கவும். உப்பு சரிப் பார்த்துக் கொள்ளவும்.   5  நிமிடம் ஊறியதும் சாப்பிடலாம். ஒரு ஊறுகாயுடன் பரிமாறவும்.

தயிர் சேமியா தயார். 

THAYIR SEMIYA - CURD WITH VERMICELLI

TAKE ONE CUP OF SEMIYA AND DRY ROAST.  ADD ONE CUP OF WATER AND COOK. IF REQUIRED CAN ADD ANOTHER HALF CUP OF WATER. ADD SALT. COOK WELL.  REMOVE FROM FLAME.

ADD 2 CUPS OF COLD WATER AND PUT EVERYTHING IN A STRAINER. STRAIN THE WATER. THIS WILL TAKE AWAY THE STICKINESS FROM SEMIYA.

TRANSFER SEMIYA TO SERVING BOWL.

HEAT 2 TBSP OF OIL IN A SMALL PAN, ADD MUSTARD, SPLIT BLACK GRAM, BENGAL GRAM, CASHEW, GREENCHILLIES, CURRY LEAVES, ASAFOETIDA . ROAST AND POUR THE SEASONING TO THE SEMIYA.  ADD GRATED CARROT, CORIANDER LEAVES . MIX WELL. 

IF U LIKE, ADD MANGO AND CUCUMBER - PEELED AND DICED INTO LITTLE PIECES.

TAKE ONE CUP OF CURD AND BEAT IT LIGHTLY ADD TO THE SEMIYA, ADD HALF CUP OF MILK.  MIX WELL. CHECK THE SALT, ADD IF NECESSARY.  LEAVE IT FOR 5 MTS AND SERVE WITH ANY PICKLE.

TASTY THAYIR SEMIYA READY.  


Thursday, January 6, 2011

தக்காளி புட்டு (சப்பாத்திக்கு தொட்டுகை) - TOMATO PUTTU (SIDE DISH FOR CHAPPATHI)

இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும். மூன்று ஆப்பிள் தக்காளி பொடியாக நறுக்கவும்.

வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் போட்டு வதக்கவும். 2 பச்சை மிளகாய் போட்டு கிளறவும்.  நல்ல பொன்னிறமானதும் தக்காளியை போடவும். உப்பு போடவும். நன்றாக கிளறி விடவும். தக்காளி நன்றாக வெந்து குழம்பனதும் அரை டம்ளர் நீரில் 2  தே.க கடலை மாவை கரைத்து  விடவும்.  மேலும் அரை டம்ளர் நீர் விடவும். நன்றாக கிளறி கொதிக்க விடவும்.  சிம் இல் வைத்து மூடி கொதிக்க விடவும். 2  நிமிடங்களில் நன்றாக சேர்ந்து கொதிக்கும்.  இறக்கி விடவும். 

தக்காளி புட்டு தயார்.  சப்பாத்திக்கு மிக நல்ல தொட்டுகை இது.

கடலை மாவுக்கு பதிலாக பொட்டுகடலையை பொடி பண்ணி தூவினால் வேறு ஒரு வகை சுவை கிடைக்கும்.

TOMATO PUTTU (SIDE DISH FOR CHAPPATHI)

METHOD:

FINELY CHOP 2 BIG ONIONS. CHOP 3 TOMATOES TOO.

ADD 2 TBSP OF OIL IN A DEEP PAN AND HEAT. SPLUTTER MUSTARD SEEDS, KADALAI PARUPPU, ULUTHAMPARUPU,   CURRY LEAVES. FRY. ADD THE ONIONS AND FRY TILL BROWN. NOW ADD 2 SPLIT GREEN CHILLIES. ADD THE TOMATOES AND LITTLE SALT AND SAUTE WELL. TILL THE TOMATOES ARE MASHED AND COOKED WELL.  NOW DISSOLVE 2 TBSP KADALAI MAVU IN HALF TUMBLER WATER AND ADD .  ADD ANOTHER HALF TUMBLER OF WATER. MIX WELL, CLOSE THE PAN WITH THE LID AND LET THE MIXTURE COOK WELL.

WHEN ALL THE INGREDIENTS ARE MIXED AND COOKED REMOVE FROM FLAME.

TOMATO PUTTU IS READY.  MAKES A HUMBLE TASTY SIDE DISH FOR CHAPPATHI.

INSTEAD OF KADALAI MAVU, U CAN POWDER POTTUKADALAI AND SPRINKLE , WHICH GIVES A TOTALY DIFFERENT TASTE.

அரிசி உப்புமா - ARISI UPUMA

ஒரு பங்கு பச்சரிசிக்கு கால் பங்கு துவரம் பருப்பு எடுத்து கழுவி வடிகட்டவும். 10 நிமிடங்கள்  வடிகட்டியிலேயே வைத்திருந்தால் சிறிது ஊறி விடும். இதை மிக்சியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். ரவை போல இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு , கறிவேப்பிலை, பெருங்காயம், 3 வரமிளகாய், எல்லாம் போட்டு வறுக்கவும். மிளகு சீரகம் தட்டி போடவும்.  இந்த தாளிப்பை அரிசி பருப்பு மீது கொட்டி 2  பங்கு நீர் விட்டு உப்பு போட்டு குக்கரில் வைத்து 3   விசில் விட்டு எடுக்கவும்.

இந்த கலவை கட்டி கட்டியாக இருந்தால் சற்றே ஆறியதும், கரண்டியால் உதிர்த்து விடவும். தேங்காய் சட்னி அல்லது புளிகுழம்புடன் பரிமாறவும்.

ARISI UPUMA :

METHOD:

TO ONE PART RAW RICE ADD QUARTER PART THUVARAM PARUPPU- RED GRAM- WASH IT WELL. STRAIN IT. LEAVE IT IN THE STRAINER FOR 10 MINUTES. IT WILL GET SOAKED A LITTLE BIT. NOW MAKE THIS INTO A COARSE POWDER LIKE RAVA.

TO A PAN ADD LITTLE OIL. HEAT IT AND ADD MUSTARD SEEDS, KADALAI PARUPPU, ULUTHAM PARUPPU, CURRY LEAVES, ASAFOETIDA,   3 DRIED CHILIES, COARSLY BROKEN PEPPER, CUMIN AND ROAST.  POUR THIS OVER THE RICE MIXTURE.  ADD 2 PARTS WATER TO THIS RICE MIXTURE . ADD SALT TO TASTE.  KEEP THIS IN A VESSEL IN THE COOKER AND COOK IT TILL 3 WHISTLES.

REMOVE AND  ENJOY ARISI UPMA.  IF THE UPMA HAS LUMPS , WITH A SPATULA STIR IT WELL TO MAKE A HOMOGENOUS MIXTURE.  SERVE IT WITH HOT COCONUT CHUTNEY OR PULIKUZHAMBU

Monday, January 3, 2011

திடீர் பருப்பு துவையல் - INSTANT PARUPU THUVAYAL

செய்முறை

3 மே. க. பருப்பு பொடி உடன் கால் கப் தேங்காய் துருவல், ஒரு ஆர்க் கறிவேப்பிலை,  உப்பு ருசிக்கு, 1 தே.க மிளகாய் பொடி இவற்றை நீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். 

திடீர் பருப்பு துவையல் தயார்.

சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.  சப்பாத்தி தோசை இட்லிக்கு தொட்டுகையாகவும் சாப்பிடலாம்.

ஏற்கனவே பருப்பு பொடியில் உப்பு கரம் இருப்பதால்,  ருசிக்கேற்ப  சேர்க்கவும்.

INSTANT PARUPPU THUVAYAL : 

METHOD:

ADD 3 TBSP OF PARUPPU PODI TO  QUARTER CUP COCONUT GRATINGS , A PINCH OF SALT, 1 TSP OF CHILLI POWDER,  ADD LITTLE WATER AND GRIND TO A THICK PASTE.

INSTANT PARUPPU THUVAYAL IS READY !!!.  

MIX WITH HOT COOKED RICE WITH LITTLE GHEE OR OIL MAKES A DELICIOUS PARUPPU THUVAYAL SAADHAM.   IT MAKES A GOOD SIDE DISH FOR CHAPPATHI, IDLI AND DOSAI TOO.

SINCE THE PARUPPU PODI HAS SALT AND CHILLI ALREADY IN IT, ADD ACCORDING TO TASTE.

பருப்புப் பொடி - PARUPPU PODI

துவரம் பருப்பு ஒரு கப்,  வரமிளகாய் 5 , பெருங்காயம் ஒரு சிட்டிகை, உப்பு 1 தே.க, பாசிப் பருப்பு ஒரு தே.க. , வெள்ளை எள் கால் தே.க. ,  எல்லாம் தனி தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும்.  ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்யவும். ரொம்ப மாவாக அரைக்காமல் கொரகொரப்பாக பொடிக்கவும்.

இதை சூடான உதிரியான சாதத்தின் மேல் போட்டு, நெய் அல்லது எண்ணெய்  ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். 

எள்ளும் பாசிபருப்பும் நான் சேர்த்துக் கொள்வது மணத்தை அதிகரிக்க,  விருப்பம் இல்லையென்றால் விட்டு விடலாம்.

PARUPPU PODI :

METHOD:

TAKE ONE CUP OF THUVARAM PARUPPU - RED GRAM- , 5 DRIED RED CHILLIES, SALT 1 TBSP, ASAFOETIDA 1PINCH , SPLIT GREEN GRAM- PASIPARUPU- 1 TSP,  WHITE SESAME SEEDS 1/4 TSP.  DRY ROAST EACH ITEM SEPARATELY IN A PAN.   BRING IT TO ROOM TEMPERATURE AND MAKE A NEAR SMOOTH POWDER.  IF IT IS VERY SMOOTH, DOESNOT TASTE WELL. SO MAKE A NEAR SMOOTH POWDER.

TO ONE CUP OF HOT COOKED RICE ADD  1 TO 1.5 TBSP OF THE PARUPU PODI, MIX WITH LITTLE GHEE OR OIL AND ENJOY PARUPU PODI SAADHAM!!!!

ADDING SPLIT GREE GRAM, AND SESAME SEEDS ARE MY ADDITION TO ENHANCE THE FLAVOUR . THEY ARE OPTIONAL ONLY.