Sunday, December 12, 2010

அக்கி ரொட்டி - AKKI ROTI (KARNATAKA SPECIAL)

அக்கி ரொட்டி (அ) அரிசி அடை
(கர்நாடகா ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள் :

  • அரிசிமாவு  - 3 கப்
  • பெரிய வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 4
  • கருவேப்பிலை - ஒரு ஆர்க்
  • கொத்துமல்லி சிறிதளவு
  • தேங்காய் துருவல் 1 கப்
  • உப்பு ருசிக்கேற்ப
  • சீரகம் 1 தே. க.
செய்முறை  :



வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும். அரிசிமாவை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, வெங்காயம், சீரகம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கருவேப்பிலை , கொத்தமல்லி  போடவும், உப்பு போட்டு நீர் தெளித்து பிசையவும்.  கையால் எடுத்து உருட்டி தட்ட வரும் பதத்தில் இருக்க வேண்டும்.  வாழை இலையில் எண்ணெய் தடவி ஒரு பெரிய உருண்டை மாவை வைத்து  நிதானமாக தட்டவும். எவ்வளவு மெலிசாக வருகிறதோ  அவ்வளவு ருசியாக இருக்கும்.

வாழை இலையை தோசைக்கல்லில் கவிழ்த்துப்  போட்டு மெதுவாக உரித்து எடுக்கவும். அடையைச் சுற்றி  எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.  ஒரு மூடியால் மூடி வைத்தால் சீக்கிரமாகவும் நன்றாகவும் வேகும்.


 
சூடாக சாப்பிட அரிசி ரொட்டி மிக அருமை.  சிறிது  நெய்யை சூடான அடை மீது வைத்தால் உருகி ஓடும். உடனே சாப்பிட வேண்டும்.

தேங்காய் கம்மியாக போட்டால் கொஞ்சம் கட்டையாய் விடும். ஆகவே தாராளமாக போடவும்.

ஒரு மாற்றத்துக்கு பச்சைமிளகாய் , கருவேப்பிலை, கொத்துமல்லி உடன் சிறிய துண்டு இஞ்சியை வைத்து மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்து போடலாம். வாசனை நன்றாக இருக்கும்.  அடையை மிகவும் மெலிதாக தட்ட முடியும் வெங்காயம் கட்டாயமாக பொடி பொடியாக நறுக்கினால்தான் மெலிதாக தட்ட முடியும்.  வாழைஇலை இல்லையென்றால், பிளாஸ்டிக் சீட்டில் தட்டலாம். ஆனால் அதை சூடான கல்லில் போடகூடாது.  சீட் ஒட்டி கொண்டு விடும். அடையை உரித்து பிறகு போடவும். சூடு தாங்கும் என்றால் கல்லில் நேரடியாக மாவுருண்டையை போட்டு தட்டி விடலாம்.



 
AKKI ROTI (A) ARISI ADAI - KARNATAKA SPECIAL 
INGREDIENTS REQUIRED:

  •  RICE FLOUR - 3 CUPS
  • ONION (BIG)  - 2
  • GREEN CHILLI - 4
  • CURRY LEAVES - 1 TWIG
  • CORIANDER  - LITTLE
  • COCONUT GRATINGS - 1 CUP
  • SALT TO TASTE
  • JEERA - 1 TSP

PROCEDURE:

. 
CHOP ONION FINELY. CHOP THE CHILLI TOO. TAKE THE RICE FLOUR IN VESSEL CONVIENIENT TO MAKE A DOUGH. ADD THE ONIONS, CHILLI, JEERA, CURRY LEAVES, CORIANDER, SALT , COCONUT . MIX. SPRINKLE WATER AND MAKE IN TO A TIGHT DOUGH. 

APPLY OIL ON A BANANA LEAF . TAKE HANDFUL OF DOUGH MAKE INTO A BALL. PLACE IT ON THE LEAF AND TAP .  MAKE  A THIN LAYER OF ADAI. AS THIN AS POSSIBLE.

PLACE THE LEAF UPSIDE DOWN ON A HOT FLAT PAN (DOSAI KAL) . REMOVE THE LEAF LEAVING THE ADAI ON THE PAN. APPLY OIL ON THE SIDES . CLOSE WITH A LID. AND LET IT COOK WELL ON BOTH SIDE SLOWLY .

AKKI ROTI - ARISI ADAI IS READY.  WHEN IT IS SUPER HOT, PUT LITTLE GHEE. IT WILL MELT AND COAT THE ADAI. THAT IS THE TASTIEST PART OF THIS DISH.

OPTIONS : YOU CAN ADD A SMALL BIT OF GINGER WITH THE CHILLI, CURRYLEAVES, CORIANDER AND GRIND IT INTO A COARSE PASTE (WITHOUT WATER). IT ADDS TO THE AROMA ALSO  IT IS  EASIER TO MAKE THIN ADAIS. ADDING LESS COCONUT MAKES THE ADAI HARDER. SO BE GENEROUS WHILE ADDING COCONUT.

IF U CANNOT FIND BANANA LEAVES, U CAN MAKE IN A PLASTIC SHEET. BUT DONOT PLACE THE PLASTIC SHEET ON THE HOT PAN. OR U CAN KEEP THE BALL OF DOUGH ON THE PAN AND TAP IT DIRECTLY ON THE PAN, WITHOUT BURNING YOUR HANDS:))

THE ONIONS MUST BE FINELY CHOPPED TO GET A VERY THIN ADAI.



ENJOY!!.

1 comment:

  1. Thanks for Sharing your valuable Information. I really like this post.

    ReplyDelete