Sunday, December 19, 2010

இட்லி / தோசை மிளகாய்ப்பொடி - IDLI / DOSAI MILAGAIPODI

ஒரு கப் கடலைப் பருப்பு, ஒரு கப்புக்கு சிறிது கம்மியாக உளுத்தம் பருப்பு, 8 - 10 வரமிளகாய், 2 மே. க. வெள்ளை எள்ளு, பெருங்காயம் கால் தே.க. , ஒரு தே.க. பாசிப் பருப்பு இவற்றை தனித் தனியாக எண்ணெய் விடாமல் சிவக்க வறுக்கவும். ஒரு ஆர்க் கருவேப்பிலையும் வறுத்து போடலாம்.  மிளகாய்க்கு மட்டும் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வறுக்கவும்.   

நன்றாக ஆற விட்டு உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும்.

மிளகாய் பொடி தயார்!!

 நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு கலந்து தொட்டுக் கொள்ளலாம்.
ரொம்ப நைசாக அரைத்தால், ருசி நன்றாக இருக்காது.  கருப்பு எள் போடலாம். பொடி நிறம் மட்டாக இருக்கும். ஆனால் மணம் நன்றாக இருக்கும். காரம் உங்கள் அளவிற்கு ஏற்றார் போல சேர்த்து கொள்ளவும்.  கல் உப்பு சேர்ப்பதனால், உப்பையும் வறுத்து போடலாம்.

எண்ணெய் விட்டு வறுக்கலாம், ஆனால் பொடி  நீண்ட நாள் தாங்காது.

IDLI / DOSAI MILAGAIPODI - HOMEMADE

ONE CUP OF KADALAI PARUPPU - BENGALGRAM SPLIT, LITTLE LESS TO ONE CUP OF BLACK GRAM-PEELED WHITE (ULUTHAM PARUPPU), 8 - 10 DRIED RED CHILLIES, ONE TWIG CURRY LEAVES, QUATER TSP OF ASAFOETIDA, 1 TSP OF SPLIT GREEN GRAM- PASIPARUPU, 1 TBSP WHITE SESAME -VELLAI EL-   DRY ROAST ALL INGREDIENTS ONE BY ONE.  ADD A DROP OF OIL WHILE ROASTING DRIED CHILLI.

ADD SALT TO TASTE AND MAKE A COARSE POWDER.

IDLI/DOSAI MILAGAI PODI IS READY!!!.  MIX WITH GHEE OR GINGELY OIL AND USE AS SIDE DISH.

IT DOESNOT TASTE WELL IF U MAKE A SMOOTH POWDER, SO MAKE A COARSE POWDER. INSTEAD OF WHITE SESAME SEEDS, CAN ADD BLACK SESAME SEEDS.  THE AROMA IS VERY GOOD, BUT MAY BE DARK IN COLOR.

No comments:

Post a Comment