Friday, December 10, 2010

நேந்திரங்காய் தோல் பொறியல் - NENDRAN BANANA PEEL PORIYAL

தேவையான பொருட்கள்
  • நேந்திரங்காய் தோல் - 1 கப் ( பொடியாக நறுக்கியது)
  • சின்ன வெங்காயம் -  கால் கப் ( பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 2
  • கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
  • கடலைப்பருப்பு - கால் கப்
  • தேங்காய் துருவல் - 3 மே.க.
  • எண்ணெய்  3 மே.க.
  • மஞ்சத்தூள் - கால் தே. க  

செய்முறை

நேந்திரங்காய் தோல் மிக பொடியாக நறுக்கவும். அதை எலுமிச்சை கலந்த தண்ணீரில் போட்டால் கறுக்காமல் இருக்கும்.
கடலைப்பருப்பு அரை கப் தண்ணீரில் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய்  3 மே.க. விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கியதும் கடலைப்பருப்பை வடிகட்டி போடவும். வாழைக்காய் தோல் துண்டங்களைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்றாக கலந்து விட்டு சிறிது நீர் தெளித்து மூடி வேக விடவும்.  5 நிமிடத்தில் வெந்து விடும். நன்றாக திருப்பி விட்டு தேங்காய் துருவலை தூவி கிளறி 1 நிமிடம் கழித்து இறக்கவும்.

மிக சுவையான நேந்திரங்காய் தோல் பொறியல் தயார்.

NENDRANKAAI - BANANA PEEL PORIYAL

INGREDIENTS REQUIRED:
  • BANANA PEEL - 1 CUP (FINELY CHOPPED)
  • SMALL ONION (SHALLOTS) - 1/4CUP (FINELY CHOPPED)
  • GREEN CHILLIES - 2
  • MUSTARD, BLACKGRAM, ASAFOETIDA, CURRY LEAVES - SEASONING
  • BENGAL GRAM (KADALAI PARUPPU) - 1/4 CUP
  • COCONUT GRATING - 3 TBSP
  • OIL 3 TBSP
  • TURMERIC - 1/4TSP
METHOD

CHOP THE BANANA PEEL TO FINE PIECES, MAKES IT EASY TO COOK. CHOP THE ONIONS.  SOAK THE BENGAL GRAM IN 1/2 CUP OF WATER FOR HALF AN HOUR.
IN A PAN, ADD OIL SEASON WITH MUSTARD, BLACKGRAM, ASAFOETIDA, CURRY LEAVES. ADD THE GREEN CHILLIES, ONIONS AND FRY . WHEN ONIONS TURN LIGHT BROWN ADD THE TURMERIC POWDER, SOAKED BENGAL GRAM (STRAIN THE WATER) , BANANA PEEL. ADD SALT AND MIX WELL. SPRINKLE LITTLE WATER AND CLOSE THE PAN WITH A LID.   COOK FOR 5 MTS. NOW ADD THE COCONUT GRATINGS MIX WELL, LEAVE IT FOR A MINUTE AND THEN REMOVE FROM FLAME

PORIYAL IS READY TO SERVE..!!
USE IT AS A SIDE DISH FOR RICE VARIETIES.

1 comment: