Saturday, December 11, 2010

அரிசி கொழுக்கட்டை - RICE KOZHUKATTAI

இதை உப்புமா கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்.

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 2 கப்
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • கடுகு,  கருவேப்பிலை, பெருங்காயம், சீரகம்  - தாளிக்க
  • உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - 2 தே. க.  
  • வரமிளகாய் - 2  அ 3
  • தண்ணீர் -  இரண்டு மடங்கு 
  • எண்ணெய் - 3 தே. க.  
  • உப்பு - ருசிக்கு

செய்முறை :

பச்சரிசியை கழுவு களைந்து தண்ணீரில் ஊற விடவும். 5  நிமிடம் கழித்து வடிய விடவும். இந்த ஈர அரிசியை வடிகட்டியிலே அரை மணி அப்படியே வைத்து விடவும். அரிசி பாதி ஊறி விடும். இதை மிக்சியில் அரைத்து சன்ன ரவையாக உடைக்கவும். 

அரிசி ரவை ஒரு கப் என்றால் தண்ணீர் 2 கப் அளந்து வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிக்க விடவும். உளுத்தம் பருப்பு கடலை பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயம், சீரகம்  சேர்த்து வறுக்கவும். தேங்காய் துருவலை போட்டு கிளறி அளந்த நீரை ஊற்றவும். உப்பு போடவும். வாணலியை மூடி வைத்து விடவும். 2  நிமிடத்தில் தண்ணீர் கொதித்து விடும்.  மூடியை நீக்கி அரிசி ரவையைக் கிளறிக்கொண்டே தூவவும். நன்றாக கிளறி விடவும். ரவை கொட்ட கொட்ட கெட்டியாகி விடும். கட்டி தட்டாமல் நன்றாக கிளறி விடவும். வாணலியில் மாவு ஒட்டாமல் வரும் போது இறக்கி விடவும்.   

இந்த மாவை  சிறிது ஆற விடவும். சிறிய  நீள உருண்டைகள் செய்து இட்லி தட்டில் ஒரு குழிக்கு இரண்டு இரண்டாக வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

அரிசி கொழுக்கட்டை தயார். தேங்காய் சட்டினி , கார சட்டினி, புளிக்குழம்புடன் பரிமாறவும். 


RICE KOZHUKATTAI:
ALSO CALLED AS UPUMA KOZHUKATTAI

INGREDIENTS REQUIRED
  • RAW RICE - 2 CUPS
  • COCONUT GRATINGS -  1 CUP
  • MUSTARD, ASAFOETIDA, CURRY LEAVES - SEASONING
  • BENGAL GRAM (KADALAIPARUPU) , BLACK GRAM (ULUTHAMPARUPU) - 2 TSP
  • DRIED CHILLI - 2-3
  • OIL 3 TBSP
  • SALT TO TASTE
  • WATER - AS SAID BELOW.

METHOD

SOAK THE RICE IN WATER FOR 5 MTS. THEN STRAIN THE WATER. LEAVE THE RICE IN THE STRAINER FOR HALF AN HOUR. RICE WILL BE HALF SOAKED. NOW, GRIND THIS RICE IN A MIXIE TO A COARSE POWDER LIKE RAVA.  MEASURE THIS RAVA

MEASURE TWO CUPS OF  WATER FOR ONE CUP OF RAVA AND KEEP ASIDE.

IN A DEEP PAN, ADD OIL. SPLUTTER MUSTARD, FRY BENGAL GRAM (KADALAIPARUPU) , BLACK GRAM (ULUTHAMPARUPU), ASAFOETIDA, CURRY LEAVES, DRIED CHILLI  IN THE OIL. ADD THE COCONUT GRATINGS STIR.  NOW ADD THE WATER AND THE SALT. CLOSE WITH A LID AND LET IT BOIL. WITHIN 2 MTS IT WILL BOIL AND OPEN THE LID. ADD THE RICE RAVA. KEEP STIRRING WHILE ADDING. STIR WELL SO THAT NO LUMPS ARE FORMED. WHEN IT IS COOKED, IT WILL NOT STICK ON THE PAN. REMOVE FROM FLAME.

LET IT COOL DOWN. NOW MAKE CYLINDRICAL BALLS AND KEEP IT IN IDLI PLATE AND STEAM COOK FOR 5 TO 7 MTS. 

ARISI KOZHUKATTAI IS READY. SERVE WITH HOT CHUTNEY OR PULIKUZHAMBU.

No comments:

Post a Comment