Monday, December 13, 2010

சாடே சாஸ் - SATAY SAUCE - MY VERSION

இதுவும் ஒரு வகையான நிலக்கடலை சட்னி. அசைவத்துடன் பரிமாறப்படுவது. தோசை, இட்லி சப்பாத்தியுடன் நல்ல ஜோடி.

தேவையான பொருட்கள்:

  • நிலக்கடலை -  1 கப் (வறுத்தது)
  • வரமிளகாய் - 3
  • புளி - சிறிதளவு
  • உப்பு ருசிக்கு
  • வெல்லம்  ஒரு சிறிய துண்டு
  • சின்ன வெங்காயம் - 3
  • பூண்டு - 4 பல்
  • தேங்காய் பால் - சிறிதளவு

செய்முறை:

நிலக் கடலை வறுத்தது இல்லையென்றால் வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்.  தேங்காய் பால் தவிர எல்லா பொருட்களையும் மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் கால் கப் எண்ணெய் விட்டு, கடுகு பெருங்காயம் தாளித்து இந்த விழுதை கொட்டவும். நன்றாக கிளறி விட்டு வதக்கவும்.

உப்பு சரி பார்த்துக்  கொள்ளவும். ஒன்றாக கொதிக்கும் போது எண்ணெய் பிரிந்து வரும் அப்போது தேங்காய் பால் சிறிதளவு விட்டு கலக்கி கொதி வந்ததும் இறக்கவும்.

இது இனிப்பு, புளிப்பு, உப்பு காரம்  என எல்லா சுவையும் கொண்ட ஒரு நல்ல தொட்டுக்கை ஆகும்.  உங்கள் சுவைக்கு ஏற்ப இனிப்பு கரம் சரி செய்து கொள்ளவும்.

சாடே சாஸ் தயார்.




SATAY SAUCE - MY VERSION

INGREDIENTS REQUIRED:

  • PEANUTS ROASTED - 1 CUP
  • DRIED CHILLI - 3
  • JAGGERY - SMALL PIECE
  • SALT TO TASTE
  • SMALL ONIONS- SHALLOTS- 3
  • TAMARIND - SMALL QUANTITY
  • GARLIC - 4 CLOVES
  • COCONUT MILK - LITTLE

METHOD:

IF THE PEANUTS ARE NOT ROASTED, DRY ROAST IT.  ADD ALL THE ITEMS EXCEPT THE COCONUT MILK AND GRIND TO A FINE PASTE

ADD OIL TO A PAN , SEASON WITH MUSTARD, ASAFOETIDA AND ADD THE PASTE. FRY. STIR WELL. WHEN IT BEGINS TO BOIL AND SPLITS IN THE OIL ADD LITTLE COCONUT MILK AND STIR AND BRING TO BOIL. REMOVE FROM STOVE

SATAY SAUCE HAS ALL SWEET, SOUR, SALTY AND HOT TASTE IN IT. IT IS A GOOD COMBINATION FOR IDLI DOSAI CHAPPATHI. IT IS AN INDONESIAN DISH  IT IS USED AS SIDE DISH FOR NON-VEG.

No comments:

Post a Comment