Wednesday, December 8, 2010

மோர் கூழ் - MORKOOZH (BUTTERMILK PUDDING)

மோர் கூழ்

தேவையான பொருட்கள் :

  • புழுங்கலரிசி - 2 கப்
  • மோர் - 1 கப்
  • உப்பு 
  • எண்ணெய் ஒரு கரண்டி தாளிக்க
  • கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம், சீரகம்  - தாளிக்க 
செய்முறை  :

புழுங்கலரிசியை கழுவி களைந்து தண்ணீரில் ஊறப் போடவும். ஒரு மணி நேரம் ஊறிய பின், தண்ணீரை வடிக்கட்டி,  மோர் சேர்த்து மிக்சியில் நல்ல விழுமூணாக அரைக்கவும்.  லேசாக புளித்த மோராக இருந்தால் சுவை கூடும். நல்ல நைஸ் மாவாக இருக்க வேண்டும். கரகரப்பாக இருந்தால் கூழ் நன்றாக வராது.  உப்பு போடவும். இதை நிறைய நீர் விட்டு தோசை மாவை விட நீரான பதத்தில் கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஒரு கரண்டி விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம்  தாளிக்கவும். அரைத்த மாவைக் கொட்டவும். கிளறிக் கொண்டே கொட்டவும். இல்லையென்றால் கட்டி தட்டி விடும்.  கட்டி தட்டாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.  மாவு கெட்டிப் பட்டுக் கொண்டே வரும். வெள்ளை நிறம் மாறி ஒரு பழுப்பு நிறம் வரும் போது ஒட்டாமல் வரும். அப்போது இறக்கி விடவும்.

இந்த கிளறிய மாவை ஒரு குக்கர்  பாத்திரத்தில் கொட்டி நன்றாக பரப்பி விடவும். இதை குக்கரில் ஆவியில் ( வெய்ட் போடாமல் ) வேக விட்டு  இறக்கவும். ஒரு தட்டில் பாத்திரத்தை கவிழ்த்து போட்டு தட்டினால், கூழ் விழுந்து விடும்.  இதை கத்தியால் கீத்து போடவும்.    மோர்கூழ் தயார்.

நல்ல கார சட்னி, தக்காளி தொக்கோடு பரிமாறவும்.

பி.கு.:  மோர் புளித்திருந்தால் கூழ் சுவையாக இருக்கும்.  வரமிளகாய் காரம் போதாதென்றால் , உப்பு போடும்போது மிளகாய்ப்பொடி போடவும்.  அரைத்த மாவு நல்ல நீராக கரைக்கவும். இல்லாவிட்டால் வாணலியில் ஊற்றும்போதே கட்டி தட்டி விடும், கிளற கஷ்டமாய் இருக்கும். மாவு வேகாது.

MORKOOZH - BUTTERMILK PUDDING

INGREDIENTS REQUIRED:

  • BOILED RICE (PUZHUNKALARISI) - 2 CUPS
  • BUTTER MILK - 1 CUP
  • SALT TO TASTE
  • OIL - 5TBSP FOR SEASONING
  • MUSTARD SEEDS, CUMIN, DRIED CHILLI, ASAFOETIDA, BENGALGRAM(KADALAIPARUPU)  

PROCEDURE:
SOAK THE RICE IN 2 CUPS OF WATER FOR AN HOUR. WASH, DRAIN THE WATER AND GRIND THE RICE WITH BUTTER MILK. MAKE A VERY SMOOTH PASTE. COARSE PASTE WILL NOT GIVE GOOD RESULTS.  ADD WATER TO MAKE IT INTO A THIN BATTER - THINNER THAN DOSAI MAVU. ADD SALT TO TASTE

HEAT 5TBSP OIL IN A VAANALI OR DEEP PAN, SPLUTTER MUSTARD, ADD CUMIN, ASAFOETIDA, BENGAL GRAM, CURRY LEAVES, DRIED CHILLI AND FRY. NOW ADD THE RICE BATTER , KEEP STIRRING WHILE ADDING AS LUMPS WILL BE FORMED.  KEEP STIRRING, THE BATTER WILL THICKEN. AS IT COOKS, THE WHITE COLOR CHANGES TO HALF WHITE . WHEN IT DOES NOT STICK TO THE SIDES, REMOVE IT FROM FLAME. PLACE THE KOOZH  IN A COOKERVESSEL OR DEEP VESSEL, SMOOTHEN THE UPPER LAYER AND STEAM COOK IT PRESSURE COOKER LIKE IDLI (WITHOUT PLACING WEIGHT).

PLACE THE VESSEL UPSIDE DOWN ON A PLATE. THE KOOZH WILL FALL ON THE PLATE. MAKE SLICES.

MORKOOZH IS READY!!.  SERVE IT WITH HOT CHUTNEY OR THAKKALI THOKKU.

N.B:  THE BUTTERMILK HAS TO BE LITTLE SOAR -PULIPPU - TASTES WELL.  IF U NEED IT SPICIER, ADD 1 TBSP OF CHILLI POWDER WHILE ADDING SALT.  THE BATTER HAS TO BE VERY WATERY, OTHERWISE IT WILL BE DIFFICULT TO STIR, MAY NOT BE COOKED WELL.

2 comments:

  1. madam i want to know how to make panneer gravy- AMBIKA

    ReplyDelete
  2. @Ambiga, thanks for your response. I will definetly update the panner gravy - panner butter masala and palak paneer in one or two days.

    ReplyDelete