Monday, December 27, 2010

காரமான பச்சை மிளகாய் தொக்கு - VERY HOT GREEN CHILLI THOKKU

பச்சை மிளகாயை நன்றாக கழுவித் துடைத்து காம்பை நீக்கவும்.  15 மிளகாய் அளவுக்கு ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி , 1 தே. க. உப்பு,  இவற்றை சிறிது நீர் விட்டு நல்ல விழுமூணாக அரைக்கவும்.  மிளகாயின் விதை தெரியாத அளவு நல்ல விழுதாக அரைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஒரு கால் கப் ஊற்றி, சுட்டதும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயம் போட்டு அரைத்த விழுதை மெல்ல  கொட்டவும். மஞ்சபொடி போடவும்.  ஒரு துண்டு வெல்லம் போடவும். கிளறி விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து, வேக வேக பச்சை நிறம் மாறி பிரவுன் நிறம் ஆகும். நீர் வற்றி எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும். இப்போது வறுத்து பொடி செய்த வெந்தய பொடி தூவவும்.   எண்ணையில் முடிச்சு முடிச்சாக தெரியும் போது இறக்கி விடவும்.

பச்சை மிளகாய் தொக்கு தயார்.  இட்லி தோசை ஆப்பம் , பிரட் சான்ட்விச் ஆகியவற்றுக்கு நல்ல தொட்டுகை.  அதிக காரமாக இருந்தால்  சிறிது நெய் கலந்து சாபிட்டால் சுவை அதிகம்.

HOT HOT GREEN CHILLI THOKKU

TAKE AROUND 15 NOS OF GREEN CHILLI, WASH AND REMOVE THE STEM HEAD.  GRIND THESE CHILLIES WITH 1 TBSP SALT, ONE SMALL LEMON SIZE TAMARIND INTO A VERY FINE PASTE.  THE SEEDS OF THE CHILLIES MUST BE GROUND WELL.

INA PAN ADD QUARTER CUP OF GINGELY OIL, HEAT IT. SPLUTTER MUSTARD SEEDS, ADD CURRY LEAVES, ASAFOETIDA A PINCH . ADD SLOWLY THE GROUND PASTE AND MIX.  ADD A PINCH OF TURMERICPOWDER. ADD A SMALL  BIT OF JAGGERY.  LET BOIL AND COOK.

THE COLOR WILL CHANGE FROM GREEN TO BROWN AS IT COOKS.  WHEN THE WATER HAS EVAPORATED AND OIL FLOATS,  SPRINKLE ROAST AND GROUND FENUGREEK POWDER AND MIX.  WHEN THE THOKKU IS SEEN SPLIT IN THE OIL REMOVE FROM FLAME.

GREEN CHILLI THOKKU IS READY.  IT IS A GOOD SIDE DISH FOR IDLI, DOSAI, SANDWICH .  IT IS VERY HOT SO MIX WITH LITTLE GHEE, IT TASTES REALLY GOOD.

3 comments:

  1. wow!! ippove my mouth is watering! will try it and call u! :D amma idhu pannirka.. but dont u add a little jaggery too?

    ReplyDelete
  2. friend, we have to add a little jaggery just to balance the hot and sour tastes.

    ReplyDelete