Friday, December 3, 2010

நேந்தரங்காய் சிப்ஸ் - BANANA (NENDRANGAI) CHIPS HOME MADE

நேந்தரங்காய் சிப்ஸ் - ஹோம் மேட்

தேவையான பொருட்கள் :

  • நேந்திரங்காய் - 1  
  • எண்ணெய் பொறிக்க
  • தேங்காய் எண்ணெய் கால் கப்
  • உப்பு
செய்முறை  :

நேந்த்ரங்க்காய் நல்ல பெரியதாக கெட்டியாக காயாக பார்த்து வாங்கவும்.

தோல் மேலே கத்தியால் கீறல் போடவும். மெல்ல கத்தியால் தோலை உரிக்கவும்.

ஒரு கப்பில் சிறிது எண்ணையில் உப்பை கரைத்து வைக்கவும்.

வாணலியில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும். சிறிது தேங்காய் எண்ணையும் விடவும். அதுவே நல்ல வாசனை கொடுக்கும்.   காரட் துருவியில் உள்ள சிப்ஸ் போடும் ப்ளேடில் வாழைக்காயை  SLICE போடவும். இதை நேரடியாக எண்ணைக்கு சற்று மேலே வைத்து  செய்யவும். எண்ணெய் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு SLICE போட்டால் போதும். ஒன்றோடு ஒன்று ஒட்டி கொள்ளாமல் கரண்டியால் கிளறி விட்டு பொறிய விடவும்.  

உப்பு கரைத்த எண்ணையில் இரண்டு மூன்று சொட்டுகள் சிப்ஸ் கொதிக்கும் எண்ணைக்குள் விடவும். கிளறி விடவும். உப்பு எண்ணையிலும் கரையும்.

கரண்டியால் கிளறும்போது கல கலவென சத்தம்  வந்துடனே சிப்சை எடுத்து வடிகட்டியில் போட்டு சிறிது சூடு ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். 

உப்பு கரைத்த எண்ணையின்  அளவை  உங்கள் தேவைக்கு தக்க  மாற்றி கொள்ளவும்.

எண்ணைக்கு பதிலாக தண்ணீரிலும் உப்பைக் கரைத்து போடலாம். உப்பு தண்ணீர் 4 சொட்டு விட்டால் முதலில் சட சடவென தெளித்து பின் அடங்கும். இந்த முறையில் உப்பு நன்றாக பிடிக்கும். சில சமயம் சிப்ஸ் சுருங்கி விடுகிறது. 

நல்ல மெல்லிய SLICES  போடக்கூடிய SLICER தான்   மிக அவசியம்.


BANANA - NENDRANGAI - CHIPS HOME MADE 

INGREDIENTS REQUIRED:
  • NENDIRANGAI BANANA - 1
  • OIL TO FRY
  • COCONUT OIL 1/4 CUP
  • SALT
PROCEDURE:

TAKE LARGE THICK RAW NENDRAN BANANA.  MAKE SLITS ON THE SKIN AND PEEL OF THE SKIN GENTLY.

DISSOLVE SALT IN A LITTLE QUANTITY OF OIL. 

HEAT OIL IN A PAN. ADD COCONUT OIL TOO, AS THIS IS WHAT GIVES GOOD AROMA.  USING A SLICER MAKE THIN SLICES OF THE BANANA DIRECTLY INTO THE HOT OIL.

SEPARATE THE SLICES IF THEY STICK TOGETHER, MIX THEM WELL, SOTHAT ALL THE SLICES ARE FRIED UNIFORMLY. 

ADD 2 TO 3 DROPS OF SALT-OIL, MIX WELL.  WHEN THE BUBBLES ARE STOPPED, IF U STIR IT, WILL HEAR THE "SOUND OF CHIPS":). NOW REMOVE AND STRAIN THE EXCESS OIL. 

U CAN ALSO DISSOLVE SALT IN LITTLE WATER AND SPRINKLE ON THE HOT OIL. THIS WILL CREATE SOUND AND SPLUTTER IN THE OIL. THOUGH THE SALT STICKS TO THE CHIPS THIS WAY BETTER, SOMETIMES THE CHIPS MAY TURN SOGGY.  SO TRY BOTH WAYS AND CHOOSE UR CONVIENIENCE.

IT WILL TAKE JUST 2 MINUTES TO FRY. SO KEEP EVERYTHING (SALT, STAINER ETC.) READY BEFORE BEGINNING.  

No comments:

Post a Comment