Monday, December 6, 2010

பரங்கிக்காய் பால் கூட்டு - REDPPUMPKIN (PARANKIKAAI) PAAL KOOTU

தேவையான பொருட்கள் :
  • பரங்கிக்காய் -  1cup (தோல் சீவி, விரல் நீளத்துக்கு மெல்லியதாக நறுக்கியது)
  • பால் - 1  cup  
  • சர்க்கரை - 2  மே.க.
  • அரிசி மாவு - 2 தே.க
  • உப்பு - கால்  தே.க
  • கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தே.க
  • வரமிளகாய் (அ) பச்சை மிளகாய் - 2
  • எண்ணெய் -  2 தே.க
செய்முறை:

வாணலியில் அல்லது குழம்பு பாத்திரத்தில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, பரங்கி துண்டங்களை  போட்டு, உப்பு போட்டு வேக விடவும்.   ரொம்ப குழையாமல் மத மதவென  வேக விடவும்.

வெந்ததும் சர்க்கரை போடவும். கரைந்ததும் அரிசி மாவை பாலில் கரைத்து விடவும். 4  கொதி வந்ததும் , கடுகு உளுத்தம் பருப்பு , மிளகாய் தாளித்து கொட்டவும்.

பாலுக்கு பதில் தேங்காய் பால் விடலாம். இரண்டும் கலந்தும் விடலாம். சுவையாக இருக்கும். சர்க்கரை போடும் போது தண்ணீர் அதிகம் இருந்தால் வடித்து விட்டு சர்க்கரையை போடவும், இல்லையென்றால் கூட்டு நீர்த்து விடும்.

பால் கூட்டு தயார். இது மிக வித்யாசமான சுவை கொண்டது. தொட்டுகையாகவும், சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.




RED PUMPKIN - PARANGIKAAI PAAL KOOTU


INGREDIENTS REQUIRED:

  • RED PUMPKIN - PARANGIKAAI - 1 CUP ( PEEL, CUT INTO FINGER SIZE SLENDER PIECES)
  • MILK - 1 CUP
  • SUGAR - 2 TBSP
  • SALT - 1/4 TSP
  • RICE FLOUR - 2 TSP
  • MUSTARD, BLACK GRAM - HALF TSP
  • DRIED RED CHILLI OR FRESH GREEN CHILLI - 2
METHOD

IN A THICK BOTTOMED VESSEL ADD LITTLE WATER WITH THE PUMPKIN PIECES AND BRING TO BOIL. ADD THE SALT AND LET IT COOK. DO NOT OVER COOK AS THE PUMPKIN WILL GET MASHED EASILY.

NOW ADD THE SUGAR. LET THE SUGAR DISSOLVE . MIX   RICEFLOUR WITH THE MILK AND POUR IT.  JUST WHEN IT STARTS BOILING REMOVE FROM FLAME.  SEASON IT WITH MUSTARD, BLACK GRAM AND CHILLI.

INSTEAD OF MILK, CAN USE COCONUT MILK. OR A MIXTURE OF BOTH. 

WHILE ADDING SUGAR, IF THERE IS TOO MUCH WATER ,  DRAIN AND THEN ADD SUGAR. ELSE THE KOOTU WILL BECOME WATERY.

ENJOY THIS SWEET-SALTY KOOTU WITH RICE OR AS SIDE DISH.

No comments:

Post a Comment