Sunday, December 12, 2010

பனீர் மசாலா - PANEER MASALA

தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் - 200 மி.லி.
  • பனீர் - 250 கி
  • வெங்காயம் - 12
  • தக்காளி - 7
  • முந்தரி - 10   கி
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பூண்டு - 10 
  • கிராம்பு - 5 
  • பட்டை - 2 சிறிய துண்டுகள்
  • ஏலக்காய் - 5 
  • உப்பு ருசிக்கு
  • மல்லித் தூள் , சீரக தூள் - ஒன்றரை தே.க. 
  • கரம் மசாலா தூள் - 1  தே.க. 
  • மிளகாய் பொடி - ருசிக்கு
  • மஞ்சப்பொடி - அரை தே.க. 
  • சர்க்கரை - 1  தே.க.
  • பால்  - 1  டம்ளர்
  • மல்லி தழை - அலங்கரிக்க

செய்முறை:

மசாலா:
8 வெங்காயங்களை நீள வாக்கில் வெட்டவும். சிறிது எண்ணையில் வதக்கி தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
தக்காளிகளை தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டவும்.
முந்த்ரியை சிறிது நீர் விட்டு அரைக்கவும்.
இஞ்சி பூண்டையும் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விடவும். வெங்காய அரவையை போட்டு வதக்கவும். சிறிது பிரவுன் ஆனதும் தக்காளியை போடவும். வாணலியை மூடி அடுப்பை சிம்ல் வைக்கவும். நீர் வற்றியதும் எல்லா பொடி வகைகளையும் போடவும். கிளறி விடவும். இதை தனியே வைக்கவும்.
GRAVY :
வாணலியில் ஒரு கப் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும், 4 பொடியாக அறிந்த வெங்காயங்களை போட்டு வதக்கவும். பிரவுன் ஆனதும், 2 பொடியாக அறிந்த தக்காளிகளை போட்டு வதக்கவும். 2 நிமிடங்கள் கழித்து மசாலா பேஸ்ட், இஞ்சி பூண்டு விழுது,  முந்திரி  விழுது போடவும். கெட்டியாக இருந்தால்  சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும். நல்ல கொதி வந்ததும் ஒரு டம்ளர் பால் விட்டு சர்க்கரை சேர்க்கவும். பனீர் துண்டங்களை போடவும். கிளறி விட்டு இறந்க்கவும் மல்லி தழை தூவவும். ஒரு ஸ்பூன் வெண்ணை போடவும்.

கொடுக்கப்பட்ட அளவுகள் 8 - 10 பேருக்கு பரிமாறலாம்.

PANEER  MASALA
INGREDIENTS REQUIRED
OIL - 200 ml
PANEER - 250 G
ONIONS - 12
TOMATOES - 7
CASHEW - 10 G
GINGER - LITTLE PIECE
GARLIC  10
CLOVES - 5
CINNAMON - 2 MEDIUM STICKS
ELAICHI - 5
SALT TO TASTE
CORIANDER POWDER - 1 1/2 TSP
JEERA POWDER - 1 1/2 TSP
GARAM MASALA POWDER - 1 TSP
RED CHILLI POWDER - TO TASTE
TURMERIC POWDER - 1/2 TSP
SUGAR - 1 TSP
MILK - 1 TUMBLER
CORIANDER - TO GARNISH

METHOD
MASALA
CUT 8 ONION LENGTHWISE. FRY IN A LITTLE OIL AND GRIND TO A PASTE WITHOUT WATER. BLEND THE TOMATOES WELL AND STRAIN. DO NOT ADD WATER. GRIND THE CASHEWS AND ALSO GINGER GARLIC.

TAKE LITTLE OIL IN A PAN. ADD THE ONION PASTE. FRY TILL BROWN. ADD THE TOMATO JUICE. CLOSE THE LID AND LET THE WATER EVAPORATE. ADD ALL THE POWDERS AND SALT. STIR AND COOK AND REMOVE FROM FLAME.
THE MAIN GRAVY
TAKE A CUP OF OIL INA PAN. ADD CINNAMON, CLOVES AND CARDAMOM. ADD 4 FINELY CHOPPED ONIONS AND FRY TILL BROWN. ADD 2 FINELY CHOPPED TOMATOES FRY FOR ABOUT 2 MINUTES. ADD THE MASALA PASTE AND FOLLOW IT UP WITH THE GINGER GARLIC PASTE ,   CASHEW PASTE . ADD A LITTLE WATER IF NECESSARY. ALLOW TO COME TO BOIL . ADD ONE TUMBLER OF MILK AND ONE TEASPOON OF SUGAR.ADD THE PANEER CUBES. ADDING A SPOON OF BUTTER IS OPTIONAL.

GARNISH WITH CORIANDER LEAVES.  THIS SERVES FOR 8-10 PEOPLE

PANEER MASALA IS READY !!

1 comment: