Sunday, December 5, 2010

முள்ளங்கி சாம்பார் - MULLANGI SAAMBAR - MY STYLE

தேவையான பொருட்கள் :

  • வெள்ளை முள்ளங்கி - 1
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • துவரம் பருப்பு - 1 /4   கப் 
  • தேங்காய் துருவல் - 2 மே.க.
  • வெல்லம் - கழக்கோடி (அப்படினா சிறிய துண்டு)
  • உப்பு ருசிக்கு
  • எண்ணெய் தாளிக்க
  • கடுகு அரை தே.க
  • பெருங்காயம் ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை ஒரு ஆர்க்
  • சாம்பார் பொடி 2  தே.க.
சாம்பார் பொடி செய்ய
  • கொத்தமல்லி விரை - 1   கப்
  • வரமிளகாய் - 10 (ருசிக்கேற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்)
  • வெந்தயம் - 1 மே.க.
  • கடலைப்  பருப்பு - 1 /4   கப் + ஒரு கை
  • பெருங்காயம் - அரை தே.க
  • ஏலக்காய் தோல் - 2
  • பட்டை - சிறிய துண்டு
 எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாக வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
செய்முறை  :

முள்ளங்கியை வட்ட வடிவமாக வெட்டி   துவரம் பருப்போடு    குக்கரில்   வேக வைக்கவும்.  புளியை ஊற வைத்து கரைக்கவும்.

தேங்காய் துருவலையும் சாம்பார் பொடியையும் சேர்த்து நீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

குழம்பு செய்யும் பாத்திரத்தில் வெந்த பருப்பு முள்ளங்கி போட்டு, மேலே புளியைக் கரைசலை விடவும். மஞ்சபொடி போடவும்.  இரண்டு கொதி விடவும். புளி வாசனை வரும் போது உப்பு போட்டு,  வேண்டும் என்றால் ஒரு சிறிய துண்டு வெல்லம் போட்டு அரைத்த தேங்காய் கலவையை போடவும். நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடவும். சாம்பார் கெட்டியாக இருந்தால் நீர் விட்டு கொள்ளவும்.   

உப்பு சரிபாத்து,  ஓரங்களில் நுரைத்து வரும்போது இறக்கி விடவும்.

கடுகு, கறிவேப்பிலை  தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை தூவவும்.

சாம்பார் தயார்.  எல்லா கெட்டி காயிலும் சாம்பார் செய்யலாம். முள்ளங்கி, சின்ன வெங்காயம், முருங்கைக்காய் இவை மிக சுவையாக இருக்கும்.  சாம்பார் பொடி நாள் ஆக வாசனை போய் விடும். 

  

RADISH SAMBAR


INGREDIENTS REQUIRED:

  • WHITE RADISH - 1
  • TAMARIND - SMALL LEMON SIZE
  • RED GRAM -THUVARAM PARUPPU - 1/4 CUP
  • COCONUT GRATED - 2 TBSP
  • JAGGERY-VELLAM - A SMALL PIECE
  • SALT TO TASTE
  • OIL TO SEASON
  • MUSTARD SEEDS 1/2 TSP
  • ASAFOETIDA ONE PINCH
  • CURRY LEAVES - 1 TWIG
  • SAMBAR POWDER - 2 TBSP
 TO MAKE SAMBAR POWDER:

  • CORIANDER SEEDS - DHANIYA - 1 CUP
  • DRIED RED CHILLIES - 10 ( ADJUST ACCORDING TO  YOUR TASTE)
  • FENUGREEK - VENDHAYAM - 1 TBSP
  • BENGAL GRAM - KADALAI PARUPU - 1/4 CUP + ONE HAND FULL
  • ASAFOETIDA - 1/2 TSP
  • CARDAMOM SKIN - 2
  • CINNAMON - 1 SMALL PIECE. 
  DRY ROAST EACH ITEM SEPARATELY AND MAKE IN TO A FINE POWDER

 PROCEDURE TO MAKE YUMMY SAMBAR:

CUT RADISH INTO ROUND PIECES AND PRESSURE COOK RED GRAM -THUVARAM PARUPU WITH THE RADISH.
DISSOLVE TAMARIND IN WATER.  GRIND COCONUT WITH THE SAMBAR POWDER TO A FINE PASTE.
IN A THICK BOTTOMED VESSEL TAKE THE COOKED REDGRAM WITH RADISH, ADD THE TAMARIND WATER. ADD A PINCH OF TURMERIC POWDER AND BRING IT TO BOIL.  FEEL THE RAW SMELL OF TAMARIND COME OUT, NOW ADD THE COCONUT PASTE, SALT AND JAGGERY.
ADD WATER IF IT IS TOO THICK. BRING TO BOIL. WHEN  THE SIDES BECOME FROTHY, REMOVE FROM FLAME.
SPLUTTER  MUSTARD SEEDS IN GHEE ADD CURRY LEAVES, ADD THIS SEASONING TO THE SAMBAR.  SPRINKLE CHOPPED CORIANDER LEAVES.    

SAMBAR READY  !!.
OTHER THAN RADISH, SAMBAR TASTES GOOD WITH SMALL ONIONS, DRUMSTICK ALSO. THOUGH SAMBAR CAN BE MADE WITH ANY NON-FLESHY VEGETABLES.




  

1 comment:

  1. madam Today i did this sambar, super, Thanks - Mahalaksmi

    ReplyDelete