Sunday, December 19, 2010

பனீர் செய்யும் முறை - HOME MADE PANEER

பால் ஒரு அரை லிட்டர் நன்றாக காய்ச்சவும். பொங்கி வரும் போது அரை மூடி எலுமிச்சை ரசம் பிழியவும்.

ஒரே ஒரு முறை கலக்கவும்.  கொதிக்க விடவும். இப்போது பால் திரிந்து கட்டியும் தண்ணீரும் பிரியும். 

நன்றாக திரிந்தவுடன் இறக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே மெல்லிய மஸ்லின் துணி அல்லது வேட்டி துணியை போட்டு அதன் மேல் திரிந்த பாலை ஊற்றவும். பனீர் கட்டி மேலே தங்கி விடும்.  வே வாட்டர் வடி கட்டவும்.

 இதை ஒரு மூட்டையாக கட்டி தொங்க விட்டு,   ஒரு 10 நிமிடம் அப்படியே விட்டு  எடுத்தால் தண்ணீர் வடிந்திருக்கும்.   ஒரு தட்டைசரிந்த வாக்கில்  வைத்து தட்டின்  மீது இந்த மூட்டையை  வைத்து  இதன் மேல் சப்பாத்தி கல்லோ வேறு கனம் ஏதாவது வைத்து  வைத்தால், ஓர் 20 நிமிடத்தில் தண்ணீர் முழுக்க வடிந்து விடும். பனீர் துணியில் ஒட்டாமல் கேக் போல வரும்.

வீட்டிலேயே பனீர் தயார்.

வே வாட்டர் வீண் செய்யவேண்டாம்.  இதை கிரேவி செய்யும் போதும், குழம்பு பொரியல் செய்ய உபயோகிக்கலாம். சத்துகள் நிறைந்தது. ஒரு பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்தல், மேலும் பாலை திரிக்க எலுமிச்சை ரசத்திற்கு பதிலாக உபயோகிக்கலாம்.

HOME MADE பனீர்

BOIL HALF LITRE MILK. WHEN IT RAISES, ADD JUICE OF HALF LEMON AND MIX ONCE.
NOW THE MILK WILL SPLIT.

KEEP BOILING TILL IT IS SPLIT WELL AND REMOVE FROM FLAME.

ON A LARGE VESSEL COVER WITH A MASLIN CLOTH OR DHOTHI CLOTH AND POUR THE SPLIT MILK.  THE PANEER IS FILTERED FROM WAY WATER.

NOW TIE THE CLOTH AND MAKE A BAG WITH PANEER AND HANG IT.  MOST OF THE WATER WILL BE FILTERED.

KEEP A LARGE FLAT PLATE IN A SLIDING POSITION AND PLACE THE PANEER BAG ON TOP OF THE PLATE AND PLACE A HEAVY CHAPPTI MAKER OR HEAVY  ITEM ON THE BAG AND LEAVE UNDISTURBED FOR 20  MTS. ALL THE WAY WATER WILL BE FILTERED AND PANEER WILL COME AWAY FROM THE CLOTH UNSTICKY.

HOME MADE PANEER READY!! 

DONT THROW AWAY THE WAY WATER. USE IT FOR MAKING ANY GRAVY OR KUZHAMBU OR PORIYAL.  MAY STORE THE WAY WATER IN A CLEAN BOTTLE IN THE FRIDGE AND USE IT INSTEAD OF LEMON JUICE TO SPLIT MILK.

No comments:

Post a Comment