Sunday, December 5, 2010

ரசப்பொடி & ரசம் RASAPODI AND RASAM

ரசப்பொடி & ரசம்

ரசப்பொடி  செய்ய தேவையான பொருட்கள் :

  • கொத்தமல்லி விரை - தனியா - 1 ஆழாக்கு or டம்ளர்
  • வரமிளகாய் -  1 ஆழாக்கு or டம்ளர்
  • துவரம் பருப்பு - கால் ஆழாக்கு or டம்ளர்
  • மிளகு - கால் ஆழாக்கு or டம்ளரில் பாதி
  • சீரகம் - கால் ஆழாக்கு or டம்ளரில் பாதி
  • கருவேப்பிலை - 3 ஆர்க்
  • பெருங்காயப் பொடி - 1tsp
எல்லாப் பொருட்களையும் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். மிக்சியில் கரகரப்பாக இடிக்கவும்.
ஒரு பேப்பரில் பரப்பி ஆறவிட்டு உலர்ந்த டப்பாவில் அடைக்கவும்.

 சுவையான ரசம் செய்முறை  :
4 பேருக்கு ரசம் :  ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை பாத்திரத்தில் போட்டு, ஒரு நாட்டு தக்காளியை கையால் பிழிந்து போட்டு, மேலே நீர் 2  டம்ளர் ஊற்றி, மஞ்சள்பொடி கால் tsp , ரசப்பொடி ஒன்றரை tbsp போட்டு அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், உப்பு ருசிக்கேற்ப போட்டு, ஒரு சிறிய வெல்லக்கட்டி போடவும்.  கால் கப் வெந்த துவரம் பருப்பில் அரை கப் நீர் ஊற்றி லேசாக கரைத்து , நீரை மட்டும்  கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். நன்றாக நுரைத்து வரும் போது, வெந்த பருப்பில் ஒரு கரண்டி போட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கி விடவும். நெய்யில் கடுகு கருவேப்பிலை தாளித்து கொட்டவும். மேலே கொத்தமல்லி தழை தூவி, பாதி மூடி வைக்கவும்.
points : 
  • சூடான ரசத்தை மூடி வைத்தால் நீர்த்து போக வாய்ப்புண்டு. சிறிது ஆறிய பிறகு மூடி விடவும்.
  • ரசப்பொடி நாள் ஆக, வாசனை போய்விடும்.
  • பொடி சிறிது கரகரப்பாக செய்தால், நல்ல வாசனை தரும்.

RASAPODI AND RASAM

INGREDIENTS REQUIRED: 

RASAPODI

  • CORIANDER SEEDS- DHANIYA - 1 TUMBLER
  • DRIED RED CHILLIES - 1 TUMBLER
  • RED GRAM- THUVARAM PARUPPU -  1/4 TUMBLER
  • BLACK PEPPER - 1/8 TUMBLER
  • CUMIN  -JEERA  - 1/8 TUMBLER
  • CURRY LEAVES - 3 TWIGS
  • ASAFOETIDA - 1 TSP
DRY ROAST EACH ITEM SEPARATELY, MIX AND MAKE A NOT SO FINE POWDER. IT MAY BE HOT. SO SPREAD IT ON A PAPER AND LET IT COOL DOWN. STORE THIS IN A DRY CONTAINER.

METHOD OF MAKING DELICIOUS RASAM :
RASAM FOR 4 : TAKE A SMALL LEMON SIZE TAMARIND IN A VESSEL, SQUEEZE WITH HANDS ONE BIG RIPE TOMATO, MASH AND ADD IT WITH THE TAMARIND. ADD 2 TUMBLERS OF WATER, 1TSP OF TURMERIC, ONE AND HALF TBSP OF RASAPODI. BRING THIS TO BOIL. AFTER THE RAW SMELL OF TAMARIND AND THE RASAPODI IS GONE, ADD SALT TO TASTE AND SMALL BIT OF JAGGERY. TO QUATER CUP OF COOKED REDGRAM- THUVARAM PARUPPU-  ADD HALF CUP OF WATER. MASH LIGHTLY, STRAIN THE PARUPU WATER AND ADD IT TO THE BOILING RASAM.
THE RASAM WILL BOIL WITH FROTH NOW.  ADD HALF QUANTITY OF THE COOKED PARUPPU AND LET THIS BOIL FOR 1 MINUTE AND REMOVE FROM STOVE. 
SEASONING:  TO 1 TSP OF GHEE SPLUTTER 1TSP OF MUSTARD SEEDS, FRY 1TWIG OF CURRY LEAVES AND ADD TO THE RASAM. SPRINKLE CHOPPED CORIANDER LEAVES.  KEEP THE RASAM HALF COVERED WHILE IT IS VERY HOT.  RASAPODI MAY LOOSE FLAVOUR IF U KEEP IT FOR TOO LONG.

2 comments:

  1. friend, rasam romba sooda irukumbodhu irukki moodina, neer vittu kollum. warm aagum varai paadhi modivaithu, piragu fulla modalaam.

    ReplyDelete